மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரம் இதோ!

0
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரம் இதோ!
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரம் இதோ!
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரம் இதோ!

மதுரை அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனமான எய்ம்ஸ்-ல் 5 துறைகளில் காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் செயல் இயக்குனர் தெரிவித்துள்ளார். தற்போது இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் எளிய முறை குறித்து இப்பதிவில் காண்போம்.

வேலை வாய்ப்புகள்:

2015 ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனை தமிழ்நாட்டுடன் சேர்த்து மொத்தம் 4 மாநிலங்களில் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மதுரையை தவிர மற்ற 3 மாநிலங்களில் கட்டுமானப்பணி தொடங்கி, அது முடியும் தருவாய்க்கே வந்துவிட்டது. ஆனால் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இதுவரை மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கவில்லை, அரசாணை வெளியிடவில்லை என பல்வேறு புகார்களை குவிந்து வருகிறது. இருப்பினும் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இன்று முதல் வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் திறப்பு – அரசு முக்கிய அறிவிப்பு!

கடந்த ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் நடப்பு கல்வியாண்டு முதல் மாணவர்கள் சேர்க்கை துவங்கும் என்று என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். மேலும் எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக பல முறை மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து உள்ளோம் என்றும் நடப்பு கல்வி ஆண்டில் 50 மாணவர்களை சேர்க்க மத்திய அரசு உறுதியாக உள்ளது என்றும் கூறினார். இதனை தொடர்ந்து தற்காலிக இடம் தேர்வு செய்யப்பட்டு முதல்வர் ஒப்புதலுடன் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்? தேர்தலுக்கு பின்னர் வெளியாகும் அறிவிப்பு? பொதுமக்கள் அதிர்ச்சி!

இந்நிலையில் மதுரை எய்ம்ஸ்-ல் 5 துறைகளில் காலிப்பணியிடங்கள் உள்ளதாக எய்ம்ஸ் செயல் இயக்குனர் தெரிவித்துள்ளார். Anatomy, Bio chemistry, Community, Family Medicine, Physiology என 5 துறைகளில் பணியாற்ற 8 உதவிப் பேராசிரியர்கள் தேவை என செயல் இயக்குனர் அறிவித்துள்ளார். இப்பணிகளுக்கு  www.jipmer.edu.in/aiims-madurai இணையதளத்தில் விண்ணப்பிக்கவேண்டும் என்று அறிவித்தார். உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க வருகிற பிப்ரவரி 8 தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!