மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க ஏப்ரல் 4ம் தேதி கடைசி நாள்!

0
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க ஏப்ரல் 4ம் தேதி கடைசி நாள்!
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க ஏப்ரல் 4ம் தேதி கடைசி நாள்!
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க ஏப்ரல் 4ம் தேதி கடைசி நாள்!

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்புகளை அரசு அறிவித்து வருகிறது. இதனை தொடர்ந்து மதுரையில் உருவாக்கப்படவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வேலைவாய்ப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஏராளமான இளைஞர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளார்கள். தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்புகளை அரசு ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் மதுரையில் உருவாக்கப்படவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவ கண்காணிப்பாளர், நிதி ஆலோசகர், செயற்பொறியாளர், நிர்வாக அதிகாரி உள்ளிட்ட பணியிடத்தில் உள்ள காலியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – ரூ.10,000 அட்வான்ஸ் தொகை!

இப்பணிக்கு 56 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதில் மருத்துவ கண்காணிப்பாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க MS அல்லது MD பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். அத்துடன் நிதி ஆலோசகர் பணிக்கு மத்திய அரசு நிறுவனத்தில் குறைந்தது 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். இதையடுத்து செயற் பொறியாளர் பணிக்கு 8 ஆண்டுகள் செயற்பொறியாளர் அல்லது உதவி பொறியாளர் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் நிர்வாக அலுவலர் பணிக்கு MBA அல்லது PGDPM படிப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

தமிழக தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு – திருத்திய கலந்தாய்வு கால அட்டவணை!

இதில் பணியிடத்திற்கு தகுந்தவாறு மாத சம்பளம் வழங்கப்படுகிறது. இதில் தகுதியான நபர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, ஆவணங்கள் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள். இப்பணிக்கு விண்ணப்பங்களை Dr.Kusa Kumar Saha, Nodal Officer (AIIMS Madurai), Admin-I (Recruitment Cell), JIPMER, Puducherry – 605006 என்ற முகவரிக்கு தபால் மூலமாக வருகிற ஏப்ரல் 4ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை பெற https://jipmer.edu.in/ என்ற இணையதளத்தை அணுக வேண்டும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here