மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் வேலை – ரூ.30,000/- ஊதியம்..!

0
மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் வேலை - ரூ.30,000/- ஊதியம்..!
மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் வேலை - ரூ.30,000/- ஊதியம்..!
மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் வேலை – ரூ.30,000/- ஊதியம்..!

மெட்ராஸ் பல்கலைக்கழகம் (MU) தற்போது வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பில் Assistant Professor பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் இப்பணிக்கு என மொத்தமாக 23 இடங்கள் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர் இறுதி நாளுக்குள் (28.04.2022) விண்ணப்பித்து பயன் பெறவும். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய விவரங்கள் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Madras University (MU)
பணியின் பெயர் Assistant Professor
பணியிடங்கள் 23
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.04.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
மெட்ராஸ் பல்கலைக்கழகம் பணியிடம்:

மெட்ராஸ் பல்கலைக்கழத்தில் Tamil, English, Economics, Commerce, Music போன்ற 16 துறைகளில் Assistant Professor பணிக்கு என 23 இடங்கள் காலியாக உள்ளது.

Assistant Professor கல்வி தகுதி:

Assistant Professor பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய துறைகளில் ஏதேனும் ஒரு Ph.D, Master Degree-யை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

TNPSC Coaching Center Join Now

விண்ணப்பதாரர் NET / SLET / SET போன்ற தகுதி தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

மெட்ராஸ் பல்கலைக்கழகம் வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் வயது வரம்பு பற்றிய விவரத்தை அறிவிப்பில் காணலாம்.

Assistant Professor சம்பளம்:

Assistant Professor பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.30,000/- மாத சம்பளமாக கொடுக்கப்படும்.

MU தேர்வு செய்யும் விதம்:

இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் UGC முறைப்படி Short List செய்யப்பட்டு நேர்முக தேர்விற்கு அழைக்கப்படுவார்கள்.

நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக பணியமர்த்தப்படுவார்கள்.

MU விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர் அறிவிப்பின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பின் அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். விண்ணப்பதாரர் விண்ணப்பங்களை 28.04.2022 என்ற கடைசி நாளுக்குள் தபால் செய்ய வேண்டும்.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

The Registrar,
University of Madras,
Chepauk, Chennai-600 005

MU Notification & Application Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!