LPG சிலிண்டர் மானியத்தொகை வரவில்லையா? தெரிந்து கொள்ளும் எளிய வழிமுறைகள் இதோ!

0
LPG சிலிண்டர் மானியத்தொகை வரவில்லையா? தெரிந்து கொள்ளும் எளிய வழிமுறைகள் இதோ!
LPG சிலிண்டர் மானியத்தொகை வரவில்லையா? தெரிந்து கொள்ளும் எளிய வழிமுறைகள் இதோ!
LPG சிலிண்டர் மானியத்தொகை வரவில்லையா? தெரிந்து கொள்ளும் எளிய வழிமுறைகள் இதோ!

இந்தியாவில் சிலிண்டர் பயனர்களுக்கு மாதந்தோறும் பெறும் சிலிண்டருக்கு மானியத்தொகை அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. உங்களின் சிலிண்டர் மானியத்தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கபட்டுள்ளதா என்பதை ஆன்லைன் மூலம் தெரிந்து கொள்ளும் வழிமுறைகளை இப்பதிவில் காண்போம்.

மானியத்தொகை:

இந்தியாவில் ஏராளமான மக்கள் சமையல் எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்துகின்றனர். இது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக உள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு தொடர்ந்து சிலிண்டர் விலையை உயர்த்தி வருகிறது. இது இல்லத்தரசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே கொரோனாவால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் சாமானிய மக்கள் வாழ்வாதாரம் இழந்து சிரமப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் சிலிண்டர் விலை அதிகரித்து வருவது பொருளாதார ரீதியாக சிரமத்தை ஏற்படுத்துகிறது. இந்த நேரத்தில் சிலிண்டருக்கான மானியத் தொகையும் வரவு வைக்கப்படவில்லை என்று புகார்கள் எழுந்து வருகிறது.

அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – மத்திய அரசின் திட்டம்! புலம்பெயர் தொழிலாளர்கள் மகிழ்ச்சி!

மத்திய அரசு சிலிண்டர் விலையில் குறிப்பிட்ட தொகையை மானியமாக வழங்கி வருகிறது. இந்த தொகையானது சிலிண்டர் வாங்கும் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கபடுகிறது. இந்த தொகை மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். கடந்த 2 வருடங்களுக்கு மேலாக மானியத்தொகை வரவு வைக்கப்படுவதில்லை என்று கூறுகின்றனர். மக்களின் நலனை கருத்தில் இந்த தொகையயை விரைவில் வரவு வைக்க கோரிக்கைகள் எழுந்தது. இது குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தற்போது சிலிண்டர் மானியத்தொகை வரவு வைக்கப்பட்டு வருகிறது. ஆன்லைன் மூலம் மானியத்தொகை வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை தெரிந்து கொள்ள கீழே சில வழிமுறைகள் பகிரப்படுள்ளன.

  • முதலில் www.mylpg.in இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதில் நீங்கள் வாங்கும் சிலிண்டர் நிறுவனத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • அடுத்ததாக சைன் இன் அல்லது சைன் அப் செய்ய வேண்டும். ஏற்கனவே ஐடி இருந்தால் அதை பதிவிட வேண்டும் இல்லையெனில் ‘new user’ என்ற ஆப்ஷனில் ’View Cylinder Booking History’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • இதில் உங்களுக்கான சிலிண்டர் மானிய தொகை வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.
  • ஒரு வேலை நீங்கள் சிலிண்டர் பதிவு செய்து அதை பெற்ற பிறகும் மானியத் தொகை கிடைக்கவில்லை என்றால் feedback’ என்ற பட்டனை கிளிக் செய்து புகாரை பதிவு செய்யலாம்.

    Velaivaippu Seithigal 2022

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!