மத்திய அரசு வழங்கும் இலவச LPG கேஸ் சிலிண்டர் – உஜ்வாலா யோஜனா திட்டம்! விண்ணப்பிப்பது எப்படி?

0
மத்திய அரசு வழங்கும் இலவச LPG கேஸ் சிலிண்டர் - உஜ்வாலா யோஜனா திட்டம்! விண்ணப்பிப்பது எப்படி?
மத்திய அரசு வழங்கும் இலவச LPG கேஸ் சிலிண்டர் - உஜ்வாலா யோஜனா திட்டம்! விண்ணப்பிப்பது எப்படி?
மத்திய அரசு வழங்கும் இலவச LPG கேஸ் சிலிண்டர் – உஜ்வாலா யோஜனா திட்டம்! விண்ணப்பிப்பது எப்படி?

இந்தியாவில் தற்போது அனைத்து வீடுகளிலும் சமையலுக்கு எரிவாயு சிலிண்டர் உபயோகபடுத்தி வருகின்றனர். அதனால் எரிவாயு சிலிண்டரின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன் விளைவாக இதன் விலையும் அதிகரித்து கொண்டே வருகிறது. தற்போது மத்திய அரசு இலவசமாக எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகளை பற்றி விரிவாக பார்ப்போம்.

சிலிண்டர் எரிவாயு

இந்தியாவில் அனைத்து வீடுகளிலும் சமையலுக்கு தேவையான இன்றியமையாத ஒன்று சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகும். மேலும் முன்பெல்லாம் அனைத்து வீடுகளிலும் விறகு அடுப்புகளை பயன்படுத்தி வந்தனர். இதனால் அதிகளவு காற்று மாசுபாடு ஏற்படுவதுடன் சமையல் செய்வதற்கும் அதிக நேரம் தேவைப்படுகிறது. இதனை எளிதாக்கும் விதமாக தற்போது அனைத்து வீடுகளிலும் சிலிண்டர் எரிவாயு பயன்பாடு அதிகரித்துள்ளது. அதனால் இதன் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் இதன் விலை எண்ணெய் நிறுவனங்களால் நிர்ணயம் செய்யப்படுகிறது. மேலும் கொரோனா கால கட்டத்தில் அதாவது கடந்த 2020ம் ஆண்டு முதல் சிலிண்டர் எரிவாயு விலை ஒவ்வொரு மாதமும் புதிய உச்சத்தை தொட்டது.

ஏப்ரல் முதல் பள்ளிகளுக்கான கோடை விடுமுறைகள் அறிவிப்பு – மாநில வாரியான பட்டியல் இதோ!

அதனால் சாமானிய மக்களால் சமையல் சிலிண்டர் வாங்க மிகவும் சிரமப்பட்டனர். அதன் காரணமாக தற்போது மத்திய அரசு உஜ்வாலா யோஜனா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கப்படுகிறது.

இதற்கு ரேஷன் கார்டு, ஆதார் கார்டு அல்லது வாக்காளர் அட்டை, வங்கி கணக்கு எண், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ உள்ளிட்ட ஆவணங்களை பெற்றிருக்க வேண்டும். இதுவரை இந்த திட்டத்தின் கீழ் கோடிக்கணக்கான பெண்கள் பயன் அடைந்துள்ளனர்.

உஜ்வாலா யோஜனா திட்டத்தில் இணைவதற்கான வழிமுறைகள்

1. முதலாவதாக  https://www.pmuy.gov.in/index.aspx என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

2. இதில் Indane, Bharat Gas, Hindustan Petroleum உள்ளிட்ட ஏதேனும் ஒரு சிலிண்டர் சேவையை தேர்வு செய்ய வேண்டும்.

Exams Daily Mobile App Download

3. இதையடுத்து தற்போது கேட்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் உள்ளிட்ட வேண்டும்.

4. இப்போது அனைத்து விவரங்களை கொடுத்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

5. இறுதியாக தங்களின் விண்ணப்பம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்ட பின் உங்களுக்கு சிலிண்டர் இணைப்பு வழங்குவதற்கான பணி தொடங்கும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here