LPG சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.135 குறைவு – வணிகர்கள் நிம்மதி!

0
LPG சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.135 குறைவு - வணிகர்கள் நிம்மதி!
LPG சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.135 குறைவு - வணிகர்கள் நிம்மதி!
LPG சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.135 குறைவு – வணிகர்கள் நிம்மதி!

ஒவ்வொரு மாதம் தொடங்கும் போதும் சிலிண்டர் விலை குறைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் வணிகர்களுக்கு குட் நியூஸ் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று அதிரடியாக குறைக்கப்பட்டது. இதன்மூலம் வணிகர்கள் அதிக மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதிரடியாக குறைவு :

இந்தியாவில் வணிக பயன்பாடு, வீட்டு உபயோகம் என 2 வகையான சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையில் அவற்றின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் தொடர்ந்து வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும், வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையும் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது.

LPG சிலிண்டர் விலை முதல் வங்கித்துறை வரை புதிய மாற்றங்கள் அறிவிப்பு – இன்று முதல் அமல்!

வீட்டு உபயோக சிலிண்டரின் விலை அதிகரித்து வருவது நடுத்தர மக்களை கடும் அவதிக்கு உள்ளாக்கியுள்ளது. வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலையும் ரூ.2,500யை தாண்டியதால், உணவுப்பொருட்களின் விலை சில இடங்களில் அதிகரிக்க துவங்கின. ஏற்கெனவே பெட்ரோல், காய்கறி விலையேற்றத்தால் தவித்து வரும் நிலையில் சிலிண்டர் விலையும் கூடுதல் சுமையை ஏற்படுத்துவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். மேலும் சிலிண்டர்களின் விலையை குறைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதோடு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டன.

Exams Daily Mobile App Download

இந்நிலையில் இன்று வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.135 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று முதல் உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் அடிப்படையில் சென்னையில் 19 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 2,508 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இனி ரூ.2373 க்கு விற்பனையாகும். இந்த விலைக்குறைப்பு மூலம் மும்பையில் ரூ.2,307 க்கு விற்ற சிலிண்டர் ரூ.2,171க்கும், கொல்கத்தாவில் ரூ.2,455க்கு விற்ற சிலிண்டர் ரூ.2,322க்கும் விற்பனையாகும். இருப்பினும் வீட்டு உபயோகத்துக்கான 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!