LPG சிலிண்டருக்கான மானியத் தொகை வந்ததா? இல்லையா? உறுதி செய்ய ஒரு ஈஸியான வழி!

0
LPG சிலிண்டருக்கான மானியத் தொகை வந்ததா? இல்லையா? உறுதி செய்ய ஒரு ஈஸியான வழி!
LPG சிலிண்டருக்கான மானியத் தொகை வந்ததா? இல்லையா? உறுதி செய்ய ஒரு ஈஸியான வழி!
LPG சிலிண்டருக்கான மானியத் தொகை வந்ததா? இல்லையா? உறுதி செய்ய ஒரு ஈஸியான வழி!

கொரோனா கால கட்டத்தில் வீட்டு உபயோகத்திற்காக சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத் தொகை வழங்கப்படவில்லை. ஆனால் தற்போது மானிய தொகை வழங்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை உறுதி செய்வதற்கு ஒரு இணையதளமும் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

சிலிண்டருக்கான மானியத் தொகை

கொரோனா கால கட்டத்தில் அரசு பல்வேறு நெருக்கடி நிலையை சந்தித்து வந்தது. அதில் குறிப்பாக நிதி நெருக்கடி நிலை ஏற்பட்டது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டருக்கு அரசு வழங்கும் மானிய தொகையை நிறுத்தி வைக்கப்பட்டது. இதற்கு முன் இந்த மானிய தொகை வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளில் வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மானிய தொகையை மத்திய அரசு மீண்டும் வழங்கியது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

தற்போது இந்த மானிய தொகை தங்கள் வங்கி கணக்குகளில் வந்ததா இல்லையா என்ற சந்தேகத்தில் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதனை ஆன்லைன் மூலமாக சரி பார்க்கலாம். அதற்கு முதலில் Mylpg.in என்ற இணையதளத்தில் சென்று இண்டேன், பாரத் கேஸ், ஹெச்பி கேஸ் ஆகிய மூன்று சிலிண்டர் நிறுவனங்களில் புகைப்படத்தில் தங்கள் நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் பின் புதிய பக்கம் ஒன்று காண்பிக்கப்படும். அதில் உள்ள Menu Bar- ல் ‘Give your feedback online’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

TNPSC குரூப் 2/ 2A (Gs) தேர்வு எழுத உள்ளோர் கவனத்திற்கு – இலவச ஆன்லைன் தேர்வுகள்..!

அதன் பின் தங்களது மொபைல் நம்பர், பயனாளியின் ஐடி, தாங்கள் வசிக்கும் மாநிலத்தின் பெயர், ஏஜென்சி பெயர் போன்ற விவரங்களை நிரப்ப வேண்டும். இதை தொடர்ந்து ‘Feedback Type’ என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதன் பின்னர் ‘Complaint’ என்பதை தேர்ந்தெடுத்து ‘Next’ கொடுக்க வேண்டும். தற்போது புதிய பக்கம் ஒன்று காண்பிக்கப்படும். அதில் தங்களின் வங்கி கணக்கில் சிலிண்டருக்கான மானியத் தொகை காண்பிக்கப்படும். மேலும் இது தொடர்பான ஏதேனும் புகார்களை தெரிவிக்க 18002333555 என்ற Toll Free- எண்ணிற்கு தொடர்பு கொள்ள வேண்டும்

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!