LPG சிலிண்டர் விலை மீண்டும் குறைவு – மகிழ்ச்சியில் வணிகர்கள்!

0
LPG சிலிண்டர் விலை மீண்டும் குறைவு - மகிழ்ச்சியில் வணிகர்கள்!
LPG சிலிண்டர் விலை மீண்டும் குறைவு - மகிழ்ச்சியில் வணிகர்கள்!
LPG சிலிண்டர் விலை மீண்டும் குறைவு – மகிழ்ச்சியில் வணிகர்கள்!

எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடந்த 4 மாதங்களில் 4வது முறையாக விலை இன்று குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வணிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சிலிண்டர் விலை குறைவு:

இந்தியாவில் வணிக பயன்பாடு, வீட்டு உபயோகம் என 2 வகையான சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் வர்த்தக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து வருகின்றன. மேலும் சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அடிக்கடி மாற்றம் செய்து வருகின்றன. அதாவது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையில் அவற்றின் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன.

Exams Daily Mobile App Download

சமீப காலமாக வணிகம் மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தன. இதனால் டீ, காபி, உணவு பொருட்களின் விலைகள் அதிகரிக்கத் துவங்கின. இது பொதுமக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியது. இதனால் சிலிண்டர்களின் விலையை குறைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். மேலும் உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை பன் மடங்கு உயர்ந்தது. தற்போது கச்சா எண்ணெய் விலை குறையத் தொடங்கியதை அடுத்து அவற்றில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களின் விலையும் குறையத் தொடங்கியுள்ளது.

மதுரையில் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 2) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் – மின்சார வாரியம் அறிவிப்பு

இந்தியாவில் கடந்த 70 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை உயர்த்தப்படாமல் உள்ளன. இந்நிலையில், வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைந்துள்ளது. அதாவது 19 கிலோ எடையுள்ள சிலிண்டரின் விலை ரூ.36.50 குறைந்துள்ளது. இதனால் அதன் விலை ரூ.2,177.50ல் இருந்து ரூ.2,141 ஆக குறைந்தததுள்ளது. மேலும் கடந்த மே 19ம் தேதிக்கு பின்னர் வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை தற்போது 4வது முறையாக குறைக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், வீட்டில் சமையல் செய்ய பயன்படுத்தும் சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!