LPG கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு ஷாக் அறிவிப்பு – விலை ரூ.102.50 அதிகரிப்பு!

0
LPG கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு ஷாக் அறிவிப்பு - விலை ரூ.102.50 அதிகரிப்பு!
LPG கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு ஷாக் அறிவிப்பு - விலை ரூ.102.50 அதிகரிப்பு!
LPG கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு ஷாக் அறிவிப்பு – விலை ரூ.102.50 அதிகரிப்பு!

இந்தியாவில் வணிக பயன்பாட்டிற்கான எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.2,355.50 ஆக அதிகரித்துள்ளது. இதனால் சிலிண்டர் பயனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இனி வரும் காலங்களில் இந்த விலை உயர்வால் உணவகங்களில் உணவு பொருட்களின் விலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வர்த்தக சிலிண்டர்:

இந்தியாவில் அதிகப்படியான மக்கள் சமையல் எரிவாயு சிலிண்டர்களை பயன்படுத்துகின்றனர். இதன் பயன்பாடு மிகவும் எளிதாக உள்ளதால் அனைத்து வீடுகளிலும் சமையல் எரிவாயு சிலிண்டர் இன்றியமையாததாக உள்ளது. இது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகவும் உள்ளது. சிலிண்டர் வர்த்தகம் மற்றும் வீட்டு சமையல் எரிவாயு என இரண்டு வகையாக உள்ளது. சமீப காலமாக சமையல் எரிவாயுவின் விலை மிகவும் அதிகரித்து வருகிறது. கடந்த வருடம் நிலவிய கொரோனா பேரிடர் காலத்தில் இருந்து சிலிண்டர் விலை மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அகவிலைப்படி (DA) உயர்வு எப்போது?

இதனை கண்டித்து மக்கள் அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை முன் வைக்கின்றனர். தற்போது வீட்டு உபயோக சிலிண்டர் விலை 1000 ரூபாயை தாண்டியுள்ளது இதனால் சாமானிய மக்கள் சிலிண்டர் வாங்குவதில் பொருளாதார ரீதியாக பல்வேறு இடர்பாடுகளை சந்திக்கின்றனர். அதே போல சிலிண்டர் வாங்கியவுடன் அதன் மானியத்தொகை நேரடியாக வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. வர்த்தக சிலிண்டர் வணிக பயன்பாட்டிற்கான எல்பிஜி சிலிண்டரின் விலையும் அதிகரித்து வருகிறது.

Exams Daily Mobile App Download

அந்த வகையில் இந்த மாதம் வணிக பயன்பாட்டிற்கான எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.102.50 உயர்த்தப்பட்டு ரூ.2,355.50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.102.50 உயர்ந்துள்ளது. வர்த்தக சிலிண்டர் விலை வியாபாரிகளுக்கு பெரும் சுமையாக இருந்து வருகிறது. இதனால் இனி உணவகங்களில் உணவு பண்டங்களின் விலை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!