Jio, Airtel பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் – மலிவு விலை ரீசார்ஜ் திட்டங்கள்! முழு விபரம் இதோ!

0
Jio, Airtel பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் - மலிவு விலை ரீசார்ஜ் திட்டங்கள்! முழு விபரம் இதோ!
Jio, Airtel பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் - மலிவு விலை ரீசார்ஜ் திட்டங்கள்! முழு விபரம் இதோ!
Jio, Airtel பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் – மலிவு விலை ரீசார்ஜ் திட்டங்கள்! முழு விபரம் இதோ!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை ஸ்மார்ட்ஃபோனைப் பயன்படுத்தி வருகின்றனர். இன்டர்நெட் இல்லாமல் எந்த விலை கொடுத்தும் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்த முடியாது. அந்த அளவிற்கு இன்டர்நெட்டின் தேவை அதிகரித்து உள்ளது. இந்நிலையில் ஜியோ மற்றும் ஏர்டெல் சூப்பரான பல ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது.

மலிவு விலை ரீசார்ஜ் திட்டங்கள்:

ஜியோ மற்றும் ஏர்டெல் தங்கள் வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் பல ரீசார்ஜ் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த ரீசார்ஜ் பட்டியலில் பல பட்ஜெட் திட்டங்களும் அடங்கும். நாட்டின் பெரும்பான்மையான மக்கள் மலிவான தினசரி டேட்டா ப்ரீபெய்ட் திட்டங்களை நம்பியுள்ளனர். இந்த திட்டங்கள் குறைந்த செலவில் அதிக நன்மைகளை வழங்குகிறது. ஜியோ மற்றும் ஏர்டெல் இரண்டு நிறுவனங்களின் திட்டங்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ ரீசார்ஜ் திட்டங்கள்:

1. ஜியோ தினசரி 1 ஜிபி டேட்டா திட்டங்களில் முதல் திட்டம் 149 ரூபாய் திட்டமாகும்.இந்த திட்டம் 20 நாள் வேலிடிட்டி திட்டமாகும். மேலும் இதில், வரம்பற்ற குரல் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 SMS வசதியும் உள்ளது.

2.மற்றொரு திட்டமான ரூ.179 திட்டத்தில் பயனர்களுக்கு தினசரி 1ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டமானது 24 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டத்திலும், வரம்பற்ற குரல் அழைப்புகள், தினசரி 100 SMS போன்ற பலன்கள் கிடைக்கின்றன.

3.இன்னொரு 1ஜிபி டேட்டா திட்டத்தையும் ஜியோ நிறுவனம் கொண்டுள்ளது. ரூ.209 ரீசார்ஜில், வரம்பற்ற குரல் அழைப்புகள், தினசரி 1ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இத்திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 28 நாட்கள் ஆகும்.

4. ரிலையன்ஸ் ஜியோ தினசரி 1.5 ஜிபி டேட்டா திட்டங்களையும் வழங்குகிறது. ஜியோ ரூ.239 ரீசார்ஜில், 28 நாட்களுக்கு தினசரி 1.5GB டேட்டாவை வழங்குகிறது. மேலும் இதே பலன்களுடன், 14 நாட்கள், 23 நாள்கள் செல்லுபடியாகும் திட்டங்கள் முறையே ரூ.99, ரூ.119 ரீசார்ஜ் மூலம் கிடைக்கிறது.அனைத்து ஜியோ திட்டங்களும், ஜியோ சினிமா, ஜியோ கிளவுட் போன்ற சில ஜியோ சேவைகளுக்கான அணுகலை வழங்குகின்றன.

ஏர்டெல் ரீசார்ஜ் திட்டங்கள்:

1.ஏர்டெலில் தினசரி 1ஜிபி டேட்டா வழங்கும், ரூ.209 ரீசார்ஜ் திட்டம் உள்ளது. இந்த திட்டம் 21 நாட்களுக்கு செல்லுபடியாகும் இந்த திட்டத்தில், பயனர்களுக்கு தினசரி 1GB டேட்டாவை வழங்கப்படுகிறது. மேலும் வரம்பற்ற குரல் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 SMS உடன் வருகிறது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

2. மற்றொரு திட்டமான ரூ.239 ரீசார்ஜில், வரம்பற்ற குரல் அழைப்புகள், தினசரி 1 ஜிபி டேட்டா, 100 SMS கிடைக்கிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 24 நாட்கள் ஆகும். ரூ.265 திட்டமானது வரம்பற்ற குரல் அழைப்புகள், தினசரி 1ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100 SMS களுடன் இருக்கிறது. இத்திட்டமானது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

3.ரூ.299 விலையில் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் திட்டத்தை நிறுவனம் வழங்குகிறது. இதிலும், இலவச குரல் அழைப்புகள், தினசரி 100 SMS, ஒரு நாளைக்கு 1.5ஜிபி டேட்டா போன்றவை பயனர்களுக்கு கிடைக்கும். அதில், விங்க் மியூசிக் இலவச அணுகல், ஏர்டெல் Xstream மொபைல் சந்தா, அப்போலோ ஹெல்த், பாஸ்டேக் கேஷ்பேக் போன்றவை அடங்கும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!