ஜியோ (Jio) சிம் பயனர்கள் கவனத்திற்கு – குறைந்த விலையில் டேட்டா!

1
ஜியோ (Jio) சிம் பயனர்கள் கவனத்திற்கு - குறைந்த விலையில் டேட்டா!
ஜியோ (Jio) சிம் பயனர்கள் கவனத்திற்கு - குறைந்த விலையில் டேட்டா!
ஜியோ (Jio) சிம் பயனர்கள் கவனத்திற்கு – குறைந்த விலையில் டேட்டா!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு சில புதிய ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த வரிசையில் ரூ.4 க்கும் குறைவாக உள்ள புதிய ரீசார்ஜ் திட்டங்கள் 1 ஜிபி டேட்டாவை வழங்க உள்ளது.

ரீசார்ஜ் திட்டம்

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, குறைந்த நாட்களில் அதிகபட்ச வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது. அதாவது குறைந்த அளவு மதிப்பில் அதிகபட்ச டேட்டாவை வழங்கி வருகிறது. அந்த வரிசையில் ரூ.4 க்கும் குறைவாக உள்ள சில ரீசார்ஜ் திட்டங்கள் 1 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இவை அனைத்தும் நீண்ட நாட்கள் வரை செல்லுபடியாகும் திட்டங்கள் ஆகும். அதாவது குறைந்தபட்சம் 56 நாட்கள் வரை டேட்டா, இலவச அழைப்புகள் மற்றும் 100 SMS உள்ளிட்டவற்றை இத்திட்டம் வழங்குகிறது.

தமிழகத்தில் ‘இந்த’ பணிகளுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் – அரசாணை வெளியீடு!

அந்த வகையில் ரிலையன்ஸ் ஜியோ அறிமுகப்படுத்தியுள்ள 5 புதிய ப்ரீபெய்ட் திட்டங்களின் விவரங்கள் தற்போது கொடுக்கப்பட்டுள்ளன. அதன் படி முதலாவதாக ரூ.3,499 க்கான ரீசார்ஜ் திட்டம். இவற்றில் ரூ .3 ரூபாய்க்கு 1 ஜிபி டேட்டாக்கள் கொடுக்கப்படுகிறது. இது ஜியோவின் நீண்ட கால ப்ரீபெய்ட் திட்டமாகும். இது 365 நாட்களுக்கு தினசரி 3 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தில் பயனர்கள் பெறும் மொத்த 1095 ஜிபி டேட்டாவுடன் இலவச அழைப்புகள் மற்றும் 100 SMS களை அளிக்கிறது.

அடுத்ததாக ரூ 2,399 திட்டம். இவற்றில் ரூ.3 செலவில் 1 ஜிபி டேட்டா கூடுதலாக கொடுக்கப்படுகிறது. இது ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவுடன், 365 நாட்கள் செல்லுபடியாகும் நீண்ட கால திட்டமாகும். இவற்றில் கிடைக்கும் மொத்த டேட்டாக்கள் 730 ஜிபி ஆகும். தொடர்ந்து ஜியோவின் ரூ 599 திட்டம், ரூ .3.50 க்கு 1 ஜிபி கூடுதல் டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் தினசரி 2 ஜிபி யுடன், 84 நாட்கள் வரை டேட்டாக்கள் கொடுக்கப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

இவற்றில் 168 ஜிபி மொத்த டேட்டாக்கள் கிடைக்கிறது. அடுத்ததாக ரூ 444 டேட்டா திட்டம். இவற்றில் ரூ.3.90 க்கு கூடுதலாக 1 ஜிபி கொடுக்கப்படுகிறது. இது ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவுடன் 56 நாட்களுக்கு மொத்தம் 112 ஜிபி டேட்டாக்கள் கொடுக்கப்படுகிறது. கடைசியாக ரூ.999 திட்டத்தில் தினசரி 3 ஜிபி டேட்டாவுடன் மொத்தம் 252 டேட்டாக்கள் கொடுக்கப்படுகிறது. இவற்றில் ரூ .3.90 செலவில் 1 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கும் மற்றொரு ப்ரீபெய்ட் திட்டம் கிடைக்கிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here