முதன்முறையாக விமானத்தில் தனது கணவருடன் சென்ற பூரிப்பில் தாமரைச்செல்வி – வைரலாகும் வீடியோ!

0
முதன்முறையாக விமானத்தில் தனது கணவருடன் சென்ற பூரிப்பில் தாமரைச்செல்வி - வைரலாகும் வீடியோ!
முதன்முறையாக விமானத்தில் தனது கணவருடன் சென்ற பூரிப்பில் தாமரைச்செல்வி - வைரலாகும் வீடியோ!
முதன்முறையாக விமானத்தில் தனது கணவருடன் சென்ற பூரிப்பில் தாமரைச்செல்வி – வைரலாகும் வீடியோ!

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் மூலமாக உலகெங்கும் பிரபலமான தாமரைச்செல்வி முதன்முறையாக தனது கணவருடன் விமானத்தில் சென்றுள்ளார். விமானத்தில் சென்று வந்த பிறகு பூரிப்புடன் தனது அனுபவத்தை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ளும்படியான வீடியோ வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் தாமரை:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர் தான் தாமரைச்செல்வி. தெருக்கூத்து கலையை மக்களுக்கு எடுத்து காட்டி சிறந்து விளங்கி வரும் தாமரைச்செல்விக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கொடுக்கப்பட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் தாமரைக்கு அவ்வளவாக ரசிகர்களின் ஆதரவு கிடைக்கவில்லை. நாட்கள் செல்ல செல்ல எக்கச்சக்கமான ரசிகர்களின் ஆதரவை பெற்று வந்தார்.

Exams Daily Mobile App Download

தாமரைச்செல்வி தான் பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியில் முதல் வெற்றியாளராக இருப்பார் என கூறப்பட்டது. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ராஜு தான் முதலிடத்தைப் பிடித்தார். இரண்டாம் இடத்தை பிரியங்கா பிடித்திருந்தார். தாமரைச்செல்வி கடைசி நாள் வரைக்கும் பிக் பாஸ் வீட்டில் தாக்கு பிடித்திருந்தார். பிக் பாஸ் சீசன் 5 ஐ தொடர்ந்து பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். இந்த நிகழ்ச்சியிலும் நினைத்ததை விட நல்ல வரவேற்பை பெற்றார். தனது மகனுடன் சேர வேண்டும் என்பதற்காக தான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து தாமரை கலந்துகொண்டார். சாதாரணமாக தெருக்கூத்து கலையில் சிறந்து விளங்கி வரும் தாமரைச்செல்விக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பு கொடுத்தது விஜய் டிவிதான்.

ராதிகாவுடன் கோபி இருப்பதை பார்த்து ஷாக்கான மீனா – சீரியலில் அடுத்து வரப்போகும் திருப்பம்!

அடுத்தடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தாமரைச்செல்வி முக்கிய போட்டியாளராக பங்கேற்று வருகிறார். பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு பிறகு பிக்பாஸ் ஜோடிகள் என்னும் நிகழ்ச்சியில் தனது கணவருடன் கலந்து கொண்டுள்ளார். தற்போது முதன்முறையாக விமானத்தில் செல்வது போன்ற புகைப்படம் ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். முதன்முறையாக விஜய் டிவி இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்திருக்கிறது. இந்த மாபெரும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி எனக் கூறி ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here