‘செம்பருத்தி’ ஷபானா & ‘சத்யா’ ஆயிஷா இருவரின் ஃபெர்பாமன்ஸ் வீடியோ- குவியும் லைக்குகள்!

0
'செம்பருத்தி' ஷபானா & 'சத்யா' ஆயிஷா இருவரின் ஃபெர்பாமன்ஸ் வீடியோ- குவியும் லைக்குகள்!
'செம்பருத்தி' ஷபானா & 'சத்யா' ஆயிஷா இருவரின் ஃபெர்பாமன்ஸ் வீடியோ- குவியும் லைக்குகள்!
‘செம்பருத்தி’ ஷபானா & ‘சத்யா’ ஆயிஷா இருவரின் ஃபெர்பாமன்ஸ் வீடியோ- குவியும் லைக்குகள்!

ஜீ தமிழில் சூப்பர் ஹிட் ஆக போய்க் கொண்டிருக்கும் செம்பருத்தி மற்றும் சத்யா இரண்டு தொடர்களின் நாயகிகள் இருவரும் சேர்ந்து வெளியிட்டுள்ள ஒரு வீடியோ தற்போது அதிகம் கவனத்தை பெற்றுள்ளது. இருவரின் ஃபெர்பாமன்ஸ்க்கும் லைக்குகள் குவிந்து வருகிறது.

ஷபானா & ஆயிஷா:

சின்னத்திரையில் உள்ள நடிகர், நடிகைகள் அனைவரும் தற்போது வெள்ளித்திரையை விட அதிக புகழையும், ரசிகர்களையும் பெற்றுள்ளனர். இதற்கு முக்கிய காரணம் வெள்ளித்திரை நாயகர்கள் எப்போதாவது திரைப்படம் வெளியாகும் போது தான் பார்க்க முடியும். ஆனால் சின்னத்திரையில் தற்போது வாரத்தில் 6 நாட்கள் வரை பார்க்க முடியும், ஒரு சில சேனல்கள் ஞாயிற்று கிழமையும் கூட சிறப்பு எபிசோடுகள் என்று ஒளிபரப்பி வருகின்றனர். இதனால் சின்னத்திரை நடிகர்கள் மக்களிடம் எளிதாக சென்று சேருகின்றனர்.

சமையல் சரியாக செய்யாததால் வருத்தப்படும் சரவணன், ஆதரவாக இருக்கும் சந்தியா – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!

இந்நிலையில், ஜீ தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பி வரும் செம்பருத்தி மற்றும் சத்யா இரண்டு தொடர்களும் மெகா ஹிட் ரகங்களை சேர்ந்தது. இதில், மற்ற அனைவரையும் விட கதாநாயகிகளுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வரும் கதையம்சத்தை கொண்டது.இரண்டு தொடர்களும் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் தான் தொடங்கப்பட்டது. இந்த தொடர்களின் மூலம் ஷபானா மற்றும் ஆயிஷா இருவரும் தமிழக மக்களுக்கும் மிகவும் பிடித்தவர்களாகி விட்டனர். ஷாபனாவிற்கு செம்பருத்தி தான் அறிமுகம் என்றாலும், ஆயிஷா இதற்கு முன்னரே விஜய் டிவியில் நடித்திருக்கிறார்.

ஜீ தமிழில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல் ‘ரஜினி’ – ப்ரோமோ ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

ஆனால் சத்யா தொடரில் அவரின் வேடம் வித்தியாசமாக மிகவும் அடாவடியாக இருக்கும். இதனால் ரவுடி பேபி என்று அழைக்கப்படுகிறார். ஷபானா மற்றும் ஆயிஷா இருவரும் அவ்வப்போது படப்பிடிப்பு தளங்களில் இருந்து ஏதாவது வீடியோ வெளியிட்டு வருவார்கள். அந்த வகையில், தற்போது ஷாபனாவும்,ஆயிஷாவும் சேர்ந்து ஒரு ரீல்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளனர். அதில், இருவரும் நன்றாக ஃபெர்பாமன்ஸ் செய்துள்ளனர். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இவர்களை பற்றி புகழ்ந்து வருகின்றனர். மேலும், இந்த வீடியோ அதிக லைக்குகளை பெற்று வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here