பான் கார்டு தொலைந்து விட்டதா? கவலை வேண்டாம்!!! திரும்ப பெற எளிமையான வழிமுறைகள் இதோ!!
இந்திய வருமான வரித்துறையால் பான் கார்டு வழங்கப்படுகிறது. மேலும் பான் கார்டு பணப் பரிவர்த்தனைக்கும் மற்றும் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கும் பயன்படுகிறது. தற்போது நீங்கள் எதிர்பாராத விதமாக பான் கார்டை தொலைத்து விட்டீர்களா? சுலபமாக திரும்ப பெறுவதற்கான வழிமுறைகளை பற்றி பார்ப்போம்.
பான் கார்டு
இந்தியாவில் தனி நபரின் முக்கிய அடையாள ஆவண அட்டைகளில் ஒன்றாக பான் கார்டு விளங்குகிறது. இந்த பான் கார்டு ஆனது இந்திய வருமான வரித்துறையால் வழங்கப்படுகிறது. பான் கார்டு பணப் பரிவர்த்தனைக்கும் மற்றும் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கும் பயன்படுகிறது. அதனால் இதில் உள்ள தகவல்கள் அனைத்தும் துல்லியமாக இருக்க வேண்டும். இந்த பான் கார்டு பெர்மனன்ட் அக்கவுண்ட் நம்பராக கருதப்படுகிறது. அத்துடன் இது நிரந்தர கணக்கு எண் எனப்படும் 10-இலக்க ஆல்பா நியூமெரிக்கல் நம்பர்களை பெற்றுள்ளது.
மத்திய அரசின் பள்ளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை – முக்கிய அறிவிப்பு!
இது ஒரு தனிப்பட்ட நபரின் அடையாளம் மட்டுமின்றி பெரிய அளவிலான பணப் பரிவர்த்தனைக்கும் பயன்படுத்தப்படுகிறது. அதனால் நீங்கள் பான் கார்டு வைத்திருக்க வேண்டியது அவசியமானதாகும். இப்போது நீங்கள் எதிர்பாராத விதமாக உங்களின் பான் கார்டை தொலைத்து விட்டால் என்ன செய்வது என்று அறியாமல் கவலைப்படுவீர்கள். மேலும் முன்பெல்லாம் பான் கார்டு வாங்க நாட்கள் கணக்கில் அலைந்து திரிந்து வாங்க வேண்டும். ஆனால் தற்போது நீங்கள் வீட்டில் இருந்தவாறு உங்களின் பான் கார்டை ஆன்லைன் முறையில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
திரும்ப பெறுவதற்கான வழிமுறைகள்
1. முதலில் https://www.incometax.gov.in/iec/foportal/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
2. இதில் “our services” என்பதில் உள்ள instant E-PAN என்பதை தேர்வு செய்து கிளிக் செய்யவும்.
3. இதில் e-pan என்பதை பதிவிறக்கம் செய்யவில்லை என்றால் நீங்கள் “get new e-pan” என்பதை கிளிக் செய்யவும்.
4. e-pan என்பதை பதிவிறக்கம் செய்வதற்கு முன்பாக check status என்பதன் கீழ் download pan என்பதை கிளிக் செய்து “continue” என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
5. இதையடுத்து 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிட்டு அதன் பின்னர் continue என்பதை கிளிக் செய்யவும்.
6. இப்போது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP எண் வரும். இந்த OTP எண்ணை உள்ளிட்ட வேண்டும்.
7. இறுதியாக உங்களது e-pan என்பது நீங்கள் கொடுத்துள்ள மெயில் ஐடிக்கு அனுப்பப்படும். அதனை பிரிண்ட் எடுத்து வைத்து கொள்ளலாம்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்