மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) இழப்பு – விரிவான விளக்கம்!

1
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) இழப்பு - விரிவான விளக்கம்!
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) இழப்பு - விரிவான விளக்கம்!
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) இழப்பு – விரிவான விளக்கம்!

மத்திய அரசு அறிவித்த படி அரசு பணியாளர்களின் DA மற்றும் அரசு ஓய்வூதியதாரர்களின் DR ஆகியவை ஜூலை 1 முதல் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஜனவரி 1 முதல் உள்ள நிலுவைத் தொகை பற்றிய தெளிவான விளக்கங்கள் இன்னும் கொடுக்கப்படவில்லை.

அகவிலைப்படி உயர்வு:

கடந்த ஆண்டு நாடு முழுவதும் பரவிய கொரோனா தொற்று காரணமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இரு முறை என்ற அளவில் கொடுக்கப்பட்டு வந்த அகவிலைப்படி (DA ) மற்றும் மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கான DR நிறுத்தப்பட்டது. கொரோனா பேரிடர் காலத்தில் மத்திய அரசுக்கு நிதி தேவை ஏற்பட்டிருப்பதால் இந்த கூடுதல் சலுகைகளை நிறுத்துவதாக அரசு விளக்கம் கொடுத்தது. அவ்வாறு மத்திய அரசு ஊழியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 3 தவணை அகவிலைப்படி உயர்வு இந்தாண்டு ஜூலை மாதத்தில் கொடுக்கப்படும் என கடந்த நாடாளுமன்ற அவையின் போது தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவில் குணமடைவோர் விகிதம் 94.55% ஆக உயர்வு – மத்திய சுகாதாரத்துறை தகவல்!

இதை தொடர்ந்து மே 8 ஆம் தேதி அன்று DA உயர்வு குறித்த CGS பிரதிநிதி அமைப்பு தேசிய கவுன்சில் மற்றும் மத்திய அரசு அதிகாரிகளுக்கு இடையே திட்டமிடப்பட்ட கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே DA நிலுவைத் தொகை கிடைப்பத்தில் சிக்கல்கள் நீடித்துள்ளது. ஒருவேளை மத்திய அரசு ஊழியர்களுக்கு DA நிலுவைத் தொகை கிடைக்காவிட்டால் அவர்கள் கணிசமான தொகையை இழக்க நேரிடும். அதன் படி 7 வது ஊதிய தொகையின் கீழ் முதல் நிலை -1 ஊழியரின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.1800 மற்றும் அவரது அடிப்படை சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை இருக்கும்.

TN Job “FB  Group” Join Now

லெவல் -1 ல் ஊழியர் பெறும் குறைந்தபட்ச நிலுவைத் தொகை ரூ.23,760 (4% 6 மாதங்களுக்கு ரூ.18,000 மற்றும் 6 மாதங்களுக்கு ரூ.18,000 இல் 7% மற்றும் 6 மாதங்களுக்கு ரூ.18,000 ல் 11%) என்ற அடிப்படையில் கிடைக்கும். இதேபோல், லெவல் -1 ஊழியருக்கு, அடிப்படை ஊதியம் ரூ.56,900 என்ற நிலையில் மொத்த நிலுவைத் தொகை ரூ.75,108 (6 மாதங்களுக்கு ரூ.56,900 இல் 4% மற்றும் 6 மாதங்களுக்கு ரூ.56,900 மற்றும் 7% ஆக இருக்கும். எனவே மத்திய அரசு ஊழியர்களுக்கான DA உயர்வில் இழப்பு ஏற்பட்டால் அவர்கள் பெரிய அளவு தொகையை இழக்க நேரிடும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. இழப்பு ஜூலை ஒன்று வரை – முதல் தவணை 4% × 18 மாதங்கள் 1/1/20- 30/6/21 = 72%
    இரண்டாவது 3% × 12 மாதங்கள் 1/7/20 – 30/6/21= 36%
    மூன்றாவது 4% × 6 மாதங்கள் /1/21 -30/6/21 = 24% ஆக அடிப்படை சம்பளத்தைப் போல் 1.32 மடங்கு இழப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!