தினசரி மாலை 6 மணிமுதல் காலை 6 மணிவரை ஊரடங்கு அமல் – புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

0
தினசரி மாலை 6 மணிமுதல் காலை 6 மணிவரை ஊரடங்கு அமல் - புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!
தினசரி மாலை 6 மணிமுதல் காலை 6 மணிவரை ஊரடங்கு அமல் - புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!
தினசரி மாலை 6 மணிமுதல் காலை 6 மணிவரை ஊரடங்கு அமல் – புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

தென் பசிபிக் தீவுகளை உள்ளடக்கிய டோங்கா நாட்டில் புதிய கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் இன்னும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு தொடரும் என்றும் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பு

தற்போது உலக நாடுகளை ஆக்கிரமித்துள்ள ஒமிக்ரான் வைரஸ் நோய்த்தொற்று பரவல் காரணமாக மீண்டுமாக ஊரடங்கு நடவடிக்கை அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வைரஸ் பரவலை தடுப்பதற்காக தென் பசிபிக் தீவுகளை உள்ளடக்கிய டோங்கா நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக டோங்காவில் இன்று (பிப்.19) ஒரு நாளில் 24 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ள நிலையில், செயலில் உள்ள மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 196 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல் – அரசு திட்டம்!

இது குறித்து அந்நாட்டின் பிரதமர் சியோசி சோவலேனி கூறுகையில், ‘சிறைச்சாலையில் உள்ள ஒருவருக்கு கொரோனா தொற்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் டோங்காவில் உள்ள மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை இப்போது 196 ஆக உள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு டோங்காவில் பதிவு செய்யப்பட்ட முதல் கொரோனா பாதிப்புகளை போலவே, தற்போதைய பாதிப்புகள் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

இதனால் நாடு முழுவதும் தற்போது அமலில் இருந்து வரும் ஊரடங்கு தொடர்புடைய கட்டுப்பாடுகள் இன்னும் ஒரு வாரத்திற்கு தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கடைகள் மற்றும் பிற வணிகங்கள் அனைத்தும் அடுத்த வாரம் முதல் வர்த்தகம் செய்ய அனுமதிக்கப்படும் என்று பிரதமர் உறுதிப்படுத்தி இருக்கிறார். இப்போது டோங்காவில் அனைத்து சிறிய சில்லறை கடைகளும் அடுத்த வாரம் முதல் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

ரயிலில் பயணம் செய்பவரா நீங்கள்? இதோ உங்களுக்கான ஹாப்பி நியூஸ்! தவறாமல் படிங்க!

அந்த வகையில் கடைகள் அடுத்த வாரத்தில் செயல்பட தொடங்குவதற்கு முன், அவற்றின் கொரோனா இணக்க திட்டத்தை மதிப்பாய்வு செய்வதற்காக சுகாதார அமைச்சகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இந்த கொரோனா இணக்கத்தை உறுதிப்படுத்த அனைத்து வணிகங்களும் கண்காணிக்கப்படும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் வழக்கம் போல பார்சல் சேவைக்கு மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிப்ரவரி 21 முதல் காலை 6 மணியில் இருந்து மாலை 6 மணி வரை சாலையோர சந்தைகள் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருமணங்கள் மற்றும் இறுதிச் சடங்குகளில் 10 பேர் வீட்டிற்குள்ளும், 20 பேர் வெளியிலும் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் இரவு நேர ஊரடங்கு உத்தரவு மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை நீடிக்கும் என்றும் அரசு ஊழியர்கள் வழக்கமான கொரோனா நெறிமுறைகளுக்கு இணங்குவதை உறுதிசெய்து தங்களது வேலைகளை 50% ஊழியர்களுடன் துவங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here