ஓமைக்ரான் பரவலை தடுக்க பொதுமுடக்கம் அமல் – உலக சுகாதார அமைப்பு விளக்கம்!

0
ஓமைக்ரான் பரவலை தடுக்க பொதுமுடக்கம் அமல் - உலக சுகாதார அமைப்பு விளக்கம்!
ஓமைக்ரான் பரவலை தடுக்க பொதுமுடக்கம் அமல் - உலக சுகாதார அமைப்பு விளக்கம்!
ஓமைக்ரான் பரவலை தடுக்க பொதுமுடக்கம் அமல் – உலக சுகாதார அமைப்பு விளக்கம்!

மக்கள் அனைவரும் அரசின் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றினால் பொதுமுடக்கம் தேவையில்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. தொற்று பரவலைத் தடுக்கவும், கட்டுப்படுத்தவும் அரசுகள் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

பொதுமுடக்கம்:

கடந்த 2019ம் ஆண்டு சீனாவின் உஹான் மாநிலத்தில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தொடர்ந்து அடுத்தடுத்த நாடுகளுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனை கட்டுப்படுத்த உலக நாடுகளை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. பொதுமக்கள் வெளியில் செல்லும் பொது கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். அவ்வப்போது கிருமி நாசினிகளை பயன்படுத்த வேண்டும். தடுப்பூசிகளை செலுத்த வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறது. மேலும் தொற்று பரவுவதை தடுக்கும் நோக்கில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த பொது முடக்கத்தை நாடுகள் அறிவித்தது.

World Badminton Rankings: 13வது இடத்தை பிடித்த இந்திய வீரர் – ரசிகர்கள் பாராட்டு மழை!

இந்த பொது முடக்கத்தால் நாட்டு மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். தொழில்கள் சரிவடைந்ததால் பொருளாதார நெருக்கடியும் நிலவியது. கடந்த 2021ம் ஆண்டு பரவிய உருமாற்றம் அடைந்த டெல்டா வகை வைரஸ் எதிர்பார்த்த அதிவேகத்தில் பரவி பாதிப்பு எண்ணிக்கையை பல மடங்காக அதிகரித்தது. இதனால் மீண்டும் கட்டுப்பாடுகள் ஊரடங்கு விதிக்கப்பட்டது. தடுப்பூசிகள் செலுத்தும் பணி விரைவுபடுத்தப்பட்டது. இதன் விளைவாக தொற்றின் தாக்கம் குறைந்து மக்கள் அச்சமின்றி இயல்பு வாழ்க்கையை நோக்கி சென்றனர். இந்த நேரத்தில் தொடர்ந்து 3ம் ஆண்டாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது.

தமிழக பொதுப்பணித்துறையில் 500 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

தற்போது கொரோனா வைரஸ் மேலும் உருமாற்றம் அடைந்து புதிய வகை ஓமிக்ரான் தொற்று பரவி வருகிறது. தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பு கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றினால் பொதுமுடக்கம் தேவையில்லை என்று தெரிவித்துள்ளது. உயிர்கள் மற்றும் வாழ்வாதாரம் என இரண்டையுமே பாதுகாப்பது அவசியம். அரசுகள் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. மேலும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுதல், முகக்கவசம் அணிதல் மற்றும் தனிமனித இடைவெளி ஆகியவற்றை பின்பற்றினாலே போதும் பொது முடக்கம் தேவையில்லை என்று உலக சுகாதார அமைப்பின் இந்திய பிரதிநிதி ரோட்ரிகோ ஆஃப்ரின் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here