சென்னையில் அதிகரிக்கும் கொரோனா, தீவிரமாகும் ஊரடங்கு? அதிகாரிகள் விளக்கம்!

0
சென்னையில் அதிகரிக்கும் கொரோனா, தீவிரமாகும் ஊரடங்கு? அதிகாரிகள் விளக்கம்!
சென்னையில் அதிகரிக்கும் கொரோனா, தீவிரமாகும் ஊரடங்கு? அதிகாரிகள் விளக்கம்!
சென்னையில் அதிகரிக்கும் கொரோனா, தீவிரமாகும் ஊரடங்கு? அதிகாரிகள் விளக்கம்!

தமிழகத்தில் சென்னை மாநகராட்சியில் கொரோனா தாக்கம் திடீரென அதிகரித்து வருகிறது. அதனை தொடர்ந்து தீவிர ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுமா? என்பது குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளார்.

தீவிர ஊரடங்கு:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்த நிலையில் மே 10ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் மூலம் நோய் பரவும் விகிதம் படிப்படியாக குறைய தொடங்கியது. தற்போது அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பரவல் தீவிரமாக அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தின் எல்லை பகுதிகளில் தொற்று சற்று தீவிரமாக பரவி வருகிறது. திருப்பூர், கோவை மாவட்டங்களை தொடர்ந்து தற்போது சென்னையிலும் சில பகுதிகளில் கொரோனா தாக்கம் அதிகரித்து உள்ளது.

இன்று பள்ளி, கல்லூரிகள் திறப்பு – மதியம் 1 மணிவரை மட்டுமே வகுப்புகள்!

கொரோனா 2ம் அலையை தொடர்ந்து நோய் பரவும் விகிதம் அதிகமாவதால் 3ம் அலை தொடங்கி விட்டது என மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். சென்னை மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் கொரோனா தாக்கம் அதிகரிக்கவில்லை என்றும் சில மண்டலங்களில் மட்டும் தாக்கம் அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் அதிகரித்து வரும் கொரோனா தொற்றின் காரணமாக இதுவரை ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையும் 8390 ஆக உயர்ந்துள்ளது. முதல் மற்றும் இரண்டாம் அலை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் மூலம் கட்டுப்படுத்தப்பட்டது. அதேபோல் தற்போது அதிகரித்து வரும் பரவலை கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசு ஊரடங்கை அமல்படுத்துமோ? என மக்கள் அச்சத்தில் உள்ளனர். ஆகஸ்ட் மாதம் முதல் ஏற்ற, இறக்கத்துடன் கொரோனா பாதிப்பு இருந்து வரும் நிலையில் பாதிப்புகளின் அடிப்படையில் இது தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!