நாடு முழுவதும் மே 17 வரை முழு ஊரடங்கு அமல் – பிரதமர் அதிரடி உத்தரவு!

0
நாடு முழுவதும் மே 17 வரை முழு ஊரடங்கு அமல் - பிரதமர் அதிரடி உத்தரவு!
நாடு முழுவதும் மே 17 வரை முழு ஊரடங்கு அமல் - பிரதமர் அதிரடி உத்தரவு!
நாடு முழுவதும் மே 17 வரை முழு ஊரடங்கு அமல் – பிரதமர் அதிரடி உத்தரவு!

கடந்த சில நாட்களாக பல நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தீவு நாடான சமோவாவில் கொரோனா பரவலால் ஊரடங்கு உத்தரவு வரும் 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக பிரதமர் அறிவித்து உள்ளார்.

ஊரடங்கு நீட்டிப்பு:

உலக நாடுகளை கொரோனா வைரஸ் கடந்த 2 ஆண்டுகளாக படாதபாடு படுத்தி வருகிறது. அதில் இருந்து தப்பிக்க ஊரடங்கு அமல்படுத்துவதே ஒரே வழியாக இருக்கிறது. இந்நிலையில் தீவு நாடான சமோவாவில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக கொரோனா பரவல் உறுதி செய்யப்பட்டது. ஆனால் அதில் இருந்து மக்கள் மீண்டு வந்தனர். இந்நிலையில் தற்போது மீண்டும் பெண் ஒருவருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா பரவல் கண்டறியப்பட்டுள்ளது. அதனால் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்!

இந்நிலையில் சமோவாவில் கடந்த 24 மணி நேரத்தில், 618 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்து இருக்கிறார். இதனால் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் மே 17 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய பிரதமர் ஃபியாம் நவோமி மாதாஃபா முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

Exams Daily Mobile App Download

அதன் படி, கொரோனாவைக் கட்டுப்படுத்த நிலை 2 ஊரடங்கு கட்டுப்பாடுகள் வரும் 17 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளார். இந்த மாதத்தில் சர்வதேச விமானங்களை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட சர்வதேச பயணிகளுக்கு, தங்கள் நாட்டிற்கு வர அனுமதி அளிக்கப்படும் எனத் தெரிவித்தார். மேலும் அந்த நாட்டில் மொத்தம் 70,439 பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை போட்டுக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here