ஜூன் 24 வரை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு – அரசு அதிரடி நடவடிக்கை!

0
ஜூன் 24 வரை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு - அரசு அதிரடி நடவடிக்கை!
ஜூன் 24 வரை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு - அரசு அதிரடி நடவடிக்கை!
ஜூன் 24 வரை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு – அரசு அதிரடி நடவடிக்கை!

மலேசியாவின் தீவு நகரமான சபாவில் கடந்த சில மாதங்களாக விதிக்கப்பட்டிருக்கும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் வரும் ஜூன் மாதம் 24ம் தேதி வரை அடுத்த 14 நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு

கடந்த சில மாதங்களாக பெருகி வரும் வன்முறை மற்றும் கடத்தல் சம்பவங்களை அடுத்து மலேசியாவின் தீவு நகரமான சபாவில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் சபாவில் தற்போது அமலில் இருக்கும் கடல் ஊரடங்கு உத்தரவு அடுத்த 14 நாட்களுக்கு அதாவது ஜூன் 24 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை வீட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு கல்லூரிகளில் ரூ.20000 தொகுப்பூதியத்துடன் 2423 விரிவுரையாளர்கள் நியமனம் – அறிவிப்பு வெளியீடு!

மேலும், வெளியாட்கள் யாரும் ஊரடங்கு உத்தரவு மண்டலங்களுக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று சபா போலீஸ் கமிஷனர் டத்தோ இட்ரிஸ் அப்துல்லா கூறியுள்ளார். இந்த ஊரடங்கு உத்தரவு சபா தவிர தவாவ், செம்போர்னா, குனாக், லஹாட் டத்து, கினாபடங்கன், சண்டகன் மற்றும் பெலூரான் ஆகிய இடங்களில் இருந்து மூன்று கடல் மைல்கள் வரையிலான பகுதிகளை உள்ளடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஆட்கடத்தல்-பரிசீலனை குழுக்கள் உட்பட எல்லை தாண்டிய குற்றவாளிகளின் நீடித்த அச்சுறுத்தல் காரணமாக இந்த நகரங்களில் இரவு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசு விளக்கம் அளித்துள்ளது.

Exams Daily Mobile App Download

இதற்கிடையில் தெற்கு பிலிப்பைன்ஸில் இருந்து பயங்கரவாதிகள் மற்றும் குற்றவாளிகள் பலரும் மலேசியக் கடற்பகுதியில் ஊடுருவுவதைத் தடுக்கவும், சபாவில் உள்ள தீவுகளுக்குச் செல்லும் சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் அல்லது சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த ஊரடங்கு உத்தரவு ஜூன் 24ம் தேதி வரை அமலில் இருக்கும் என்பது கவனிக்கத்தக்கது. இக்கட்டுப்பாடுகள் முதலில் ஜூன் 8ம் தேதி வரை அமலில் இருந்தது. இதற்கிடையில் மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், ஊரடங்கு சட்டம் அமலில் உள்ள பகுதிகளில் கடல் மார்க்கமாக செல்வதற்கும் போதிய சான்றிதழ்களுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here