கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதுமாக நீக்கப்படும் – அயர்லாந்து அரசின் தகவல்!

0
கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதுமாக நீக்கப்படும் - அயர்லாந்து அரசின் தகவல்!
கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதுமாக நீக்கப்படும் - அயர்லாந்து அரசின் தகவல்!
கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதுமாக நீக்கப்படும் – அயர்லாந்து அரசின் தகவல்!

அயர்லாந்து நாட்டில் வரும் அக்டோபர் மாதத்தில் மக்கள் அனைவருக்கும் 90% கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட பின்னர் நாட்டில் முழுவதுமாக கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என்று பிரதமர் மைக்கேல் மார்ட்டின் அறிவித்துள்ளார்.

கட்டுப்பாடுகள் நீக்கம்:

உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் 2ம் அலையின் தாக்கத்தினால் மிகவும் பாதித்துள்ளது. முதல் அலையின் பாதிப்பை விட 2ம் அலையினால் ஏற்பட்ட பாதிப்புகள் அதிக அளவில் இருந்தது. நோய் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், தொற்றை தடுப்பதில் முன்னிலையில் இருப்பது கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி தான். இதனால் உலக நாடுகள் அனைத்தும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் மீண்டும் தவணை முறையில் வீடுகள் – அமைச்சரின் அறிவிப்பு!

இந்நிலையில், அயர்லாந்து நாட்டு பிரதமர் மைக்கேல் மார்ட்டின் அக்டோபர் 22 முதல் பார்கள் மற்றும் உணவகங்களில் தடுப்பூசி சான்றிதழ்கள் காண்பிப்பதற்கான முறை கைவிடப்படும், எல்லா வகையான நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் நபர்களின் எண்ணிக்கையில் இருந்த கட்டுப்பாடுகளும் நீக்கப்படும். கட்டுப்பாடுகளில் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்படும் என்றும், வரும் வாரம் முதல் 60% இருக்கைகளுடன் திரையரங்குகளை மீண்டும் திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இதுவரை அங்கு 90% வயது மூத்தவர்களுக்கு முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், 12 வயதுக்கு மேல் உள்ள 80% நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்ட்டுள்ளது. மிக அதிக நாட்கள் கொரோனா கட்டுப்பாடுகளை விதித்த நாடுகளுள் அயர்லாந்து நாடும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் வரும் அக்டோபர் மாதம் முதல் வெற்றிகரமாக தடுப்பூசி செலுத்தப் பட்ட பிறகு அனைத்து தொற்றுநோய் கட்டுப்பாடுகளும் திரும்பப் பெறப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!