ஜூன் 7 முதல் இரவு 7 மணி வரை கடைகள் திறக்க அனுமதி – ஊரடங்கு தளர்வுகள் அறிவிப்பு!
உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்து உள்ளதால் மேலும் 2 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. மேலும் ஜூன் 7ம் தேதி முதல் இந்த தளர்வுகள் அமலுக்கு வர உள்ளது.
ஊரடங்கு தளர்வுகள்:
உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,092 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 4,346 நோயாளிகள் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். மாநிலத்தின் குணமடையும் விகிதம் 97.6% ஆகவும், பாதிப்பு விகிதம் 0.4% ஆகவும் உள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் 19,438 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. மே 30ம் தேதி அன்று மாநிலத்தில் மொத்தம் உள்ள 75 மாவட்டங்களில் 55 மாவட்டங்களின் ஊரடங்கு கட்டுப்பாடுகளை உத்தரபிரதேச அரசு நீக்கி தளர்வுகளை அறிவித்துள்ளது.
TN Job “FB
Group” Join Now
மே 31ம் தேதி சோன்பத்ரா, தியோரியா, பாக்பத், பிரயாகராஜ், பிஜ்னோர் மற்றும் மொராதாபாத் ஆகிய மாவட்டங்களுக்கு தளர்வு நீட்டிக்கப்பட்டது. ஜூன் 1ம் தேதி லக்கிம்பூர் கிரி, காசிப்பூர் மற்றும் ஜான்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு தளர்வுகளை அரசு அறிவித்தது. ஜூன் 3ம் தேதி அன்று முதல் ஜான்சிக்கு தளர்வுகள் நீட்டிக்கப்பட்டது.
ஆதார், பான் கார்டு இணைக்க ஜூன் 30 கடைசி நாள் – ஆன்லைனில் செய்வது எப்படி?
இதனை தொடர்ந்து பரேலி மற்றும் புலந்த்ஷர் ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் கொரோனா வழக்குகள் 600 க்கும் குறைவாக உள்ளது. இதனால் அங்கு நோய் கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியில் உள்ள கடைகள் மற்றும் சந்தைகளை வாரத்தில் ஐந்து நாட்கள் திறக்க அனுமதித்தது. அதனபடி, ஜூன் 7ம் தேதி முதல் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. மேலும், தினசரி இரவு நேர மற்றும் வார இறுதி ஊரடங்குகள் அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் 2 மணி வரை செயல்பட வேண்டும் டீ கடை சலூன் கடை துணிக்கடை இவர்கள் எல்லாம் என்ன செய்வார்கள் முதலில் சரியான திட்டமிடல் வேண்டும் 🔥🔥🔥🔥