மாநிலத்தில் நாளை (மே 3) ரம்ஜான் பண்டிகை அன்று ஊரடங்கு – அரசு அதிரடி அறிவிப்பு!

0
மாநிலத்தில் நாளை (மே 3) ரம்ஜான் பண்டிகை அன்று ஊரடங்கு - அரசு அதிரடி அறிவிப்பு!
மாநிலத்தில் நாளை (மே 3) ரம்ஜான் பண்டிகை அன்று ஊரடங்கு - அரசு அதிரடி அறிவிப்பு!
மாநிலத்தில் நாளை (மே 3) ரம்ஜான் பண்டிகை அன்று ஊரடங்கு – அரசு அதிரடி அறிவிப்பு!

மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த மாதம் கார்கோனில் நடைபெற்ற ராமநவமி நிகழ்ச்சியில் இரு தரப்பினர்களுக்கிடையே பயங்கரவாத தாக்குதல் ஏற்பட்டது. இதேபோல ஏதும் பிரச்சனை ஏற்படாத வகையில் அடுத்தடுத்த பண்டிகைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை மாநில அரசு விதித்து வருகிறது. அந்த வகையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஊரடங்கு கட்டுப்பாடு குறித்த முக்கிய அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.

ஊரடங்கு அமல்

இந்தியாவில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து கடந்த மார்ச் 31ம் தேதி அன்று அனைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளையும் திரும்ப பெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா பேரலையின் 4ம் அலை ஜூன் மாதத்தில் தொடங்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி இந்தியாவில் தற்போது தலைநகர் டெல்லி, தமிழகம், மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

TNPSC Group 2, 2a தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – முக்கிய கோரிக்கை முன்வைப்பு!

அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் கடந்த மாதம் ராமநவமி அன்று இரு தரப்பினர்களுக்கிடையே பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. இதில் ஏராளமானோருக்கு படுகாயம் ஏற்பட்டது. அத்துடன் இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து மத்திய பிரதேசத்தில் நடைபெறும் பண்டிகை தினத்தன்று கலவரம் ஏற்படுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகள் அரசு அமல்படுத்தி வருகிறது.

Exams Daily Mobile App Download

அந்த வகையில் இன்று அல்லது நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதனால் அன்றைய தினம் இஸ்லாமியர்கள் சிறப்பாக தங்களின் பண்டிகையை கொண்டாட பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக ரம்ஜான் தினமான இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதே போன்று நாளை அட்சய திருதியை பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதற்கும் அரசு தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!