இன்று முதல் மே 13 வரை மினி ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!!

0
இன்று முதல் மே 13 வரை மினி ஊரடங்கு அமல் - மாநில அரசு அறிவிப்பு!!
இன்று முதல் மே 13 வரை மினி ஊரடங்கு அமல் - மாநில அரசு அறிவிப்பு!!
இன்று முதல் மே 13 வரை மினி ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!!

நாகலாந்து மாநில அரசு தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மே மாதத்தினை ஒட்டி கோடைகால விடுமுறையினை அறிவித்துள்ளது. அதே போல் கொரோனா பரவல் காரணமாக பல தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

கொரோனா கால தடுப்பு நடவடிக்கைகள்:

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் மிகவும் அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டே தான் இருக்கின்றது. இப்படியாக இருப்பதால், மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதில் ஒரு பகுதியாக நாகலாந்து மாநில அரசு தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறையை அறிவித்துள்ளது.

மே 3ம் தேதி வரை 11 மாவட்டங்களில் முழு ஊரடங்கு – அரசு உத்தரவு!!

அதே போல் அங்கு கொரோனா பரவல் அதிகரித்து வருவதனை அடுத்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியிடங்களுக்கு செல்வதனை தவிர்த்தல் வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். திருமணம் போன்ற விழாக்களில் 100 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது, அதே போல் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களான பார்க், நூலகம், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவை செயல்பட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் 50 சதவீதம் பேர் மட்டும் அனுமதிக்கப்படவுள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

அதே போல் பொது இடங்களில் மக்கள் கூடும் போது கொரோனா கால தடுப்பு நடவடிக்கைகளை சரி வர பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த புது விதிமுறைகள் வரும் மே மாதம் 13 ஆம் வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here