ஏப்ரல் 25 வரை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு – மாநில அரசு உத்தரவு!

0
ஏப்ரல் 25 வரை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு - மாநில அரசு உத்தரவு!
ஏப்ரல் 25 வரை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு - மாநில அரசு உத்தரவு!
ஏப்ரல் 25 வரை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு – மாநில அரசு உத்தரவு!

சில பாதுகாப்பு காரணங்களுக்காக மலேசியாவின் சபா மாநிலத்தில் விதிக்கப்பட்டிருந்த கடல் ஊரடங்கு உத்தரவு வரும் ஏப்ரல் 25 வரை நீட்டிக்கப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

முழு ஊரடங்கு

கடந்த சில ஆண்டுகளாக கடத்தல்-கப்பனக் குழுக்கள் உட்பட எல்லை தாண்டிய குற்றவாளிகளின் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு மலேசியாவின் சபா மாநிலத்தில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை கடல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருந்தது. அந்த வகையில் கடல் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து நீட்டிக்க வேண்டும் என்ற சபா காவல்துறை ஆணையர் டத்தோ இட்ரிஸ் அப்துல்லாவின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, இப்போது ஏப்ரல் 25 வரை இக்கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

TN TRB வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – TET தேர்வர்கள் கவனத்திற்கு!

அந்த வகையில், சபாவின் தவாவ், செம்போர்னா, குனாக், லஹாத் டத்து, கினாபதங்கன், சண்டகன் மற்றும் பெலூரான் ஆகிய பகுதிகளில் இருந்து மூன்று கடல் மைல் தொலைவு வரையிலான பகுதிகளை ஊரடங்கு சட்டம் உள்ளடக்கி இருக்கிறது. அதனால் சம்பந்தப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் ஊரடங்குச் சட்டத்தின் போது தங்கள் வீடுகளை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் இந்த கால கட்டங்களில் வெளியாட்கள் யாரும் ஊரடங்கு உத்தரவு மண்டலங்களுக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது தீவுகளில் உள்ள உள்ளூர்வாசிகள், சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை அச்சுறுத்தும் பயங்கரவாதிகள் மற்றும் குற்றவாளிகளின் அத்துமீறலைத் தடுக்க, இந்த நீர்நிலைகளில் ஊரடங்கு உத்தரவு தொடர வேண்டியது அவசியம் என அரசு வெளியிட்ட ஒரு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஊரடங்கு சட்டம் உள்ள பகுதியில் படகு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு வசதியாக முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here