நாட்டின் தலைநகரில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு – உக்ரைன், ரஷ்யா போர் எதிரொலி!

0
நாட்டின் தலைநகரில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு - உக்ரைன், ரஷ்யா போர் எதிரொலி!
நாட்டின் தலைநகரில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு - உக்ரைன், ரஷ்யா போர் எதிரொலி!
நாட்டின் தலைநகரில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு – உக்ரைன், ரஷ்யா போர் எதிரொலி!

உக்ரைன் தலைநகரில் ரஷ்ய படைகள் தொடர்ந்து முன்னேறி வரும் நிலையில், கெய்வ் மேயர் சனிக்கிழமை நகர் முழுவதும் அங்கு ஊரடங்கு உத்தரவை நீடித்துள்ளார். இது தொடர்பான அறிக்கையை அவர் வெளியிட்டுள்ளார்.

ஊரடங்கு நீட்டிப்பு:

உக்ரைன் சுகாதார அமைச்சர் விக்டர் லியாஷ்கோ அளித்த தகவலின் படி ரஷ்ய தாக்குதலில் இதுவரை மூன்று குழந்தைகள் உட்பட 198 பேர் கொல்லப்பட்டதாகவும், 33 குழந்தைகள் உட்பட 1,115 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார். உயிரிழந்தவர்களில் இராணுவத்தினரும் பொதுமக்களும் அடங்குவார்களா என்பதை அமைச்சரின் அறிக்கை தெளிவுபடுத்தவில்லை. உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, நாட்டை விட்டு வெளியேறுவதற்கான வாய்ப்பை அமெரிக்கா அளித்தது. ஆனால் அவர் தன் நாட்டில் சண்டை நடந்து கொண்டிருப்பதாகவும், தனக்கு போர் ஆயுதங்கள் தான் தேவைப்படுவதாகவும், சுற்றுலா தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.

ஏப்ரல் 1 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு – இரவு நேர ஊரடங்கு நீக்கம்! அரசு அனுமதி!

பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சகம் சனிக்கிழமையன்று அளித்த தகவலின் படி ரஷ்ய படைகளின் பெரும்பகுதி இப்போது கிய்வின் மையத்திலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாகக் கூறியது. உக்ரேனிய ஆயுதப் படைகள் நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பைத் தொடர்கின்றன என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. சனிக்கிழமை காலை, கிய்வ் வின் தென்மேற்கு புறநகரில் உள்ள உயரமான அடுக்குமாடி கட்டிடத்தை ஏவுகணை ஒன்று தாக்கியது என்று உள்துறை அமைச்சரின் ஆலோசகர் செய்தியில் தெரிவித்துள்ளார். இதனால் மக்களின் பாதுகாப்பு கருதி உக்ரைன் தலைநகரில் ரஷ்ய துருப்புக்கள் முன்னேறி வரும் நிலையில், கெய்வ் மேயர் சனிக்கிழமை நகரில் ஊரடங்கு உத்தரவி அறிவித்துள்ளார்.

தமிழக ஆசிரியர்களுக்கு பணி நிரந்தர உத்தரவு? வலுக்கும் கோரிக்கை!

அதன்படி, தினமும் மாலை 5 மணி முதல் காலை 8 மணி வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கும் என்றும், நகரத்தின் பாதுகாப்பையும் அதன் மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையிலும் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஊரடங்கு உத்தரவின் போது வெளியில் சுற்றும் அனைத்து பொதுமக்களும் ரஷ்ய ஆதரவாளர்கள் என்றும், உளவு குழுக்களின் உறுப்பினர்களாக கருதப்படுவார்கள் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தலைநகரில் இரவு 10 மணி முதல் காலை 7 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here