தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று பரவல் – மீண்டும் அமலாகும் கட்டுப்பாடுகள்!

0
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று பரவல் - மீண்டும் அமலாகும் கட்டுப்பாடுகள்!
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று பரவல் - மீண்டும் அமலாகும் கட்டுப்பாடுகள்!
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று பரவல் – மீண்டும் அமலாகும் கட்டுப்பாடுகள்!

தமிழகத்தில் இறுதியாக கொரோனா 3ம் அலை பாதிப்புகள் கடந்த ஜனவரி மாதம் உச்சத்தில் இருந்த நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. தற்போது மீண்டும் தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தமிழகத்தில் பதற்ற நிலை நீடிக்கிறது.

கொரோனா கட்டுப்பாடுகள்:

தமிழகத்தில் கொரோனா தொற்றின் முதல் 3 அலைகளை சமாளிக்க அரசு மிகவும் தீவிரமாக போராடி வந்தது. இதற்காக மிகவும் கடுமையான கொரோனா கால கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதன் பிறகு தான் தொற்று பரவல் கட்டுக்குள் வந்தது. நோய்த் தொற்று பரவல் குறைந்த பிறகு கொரோனா கால கட்டுப்பாடுகள் அனைத்தும் தமிழகத்தில் நீக்கப்பட்டது. இதனால் கடந்த 2 வருடங்களுக்கு பிறகு தற்போது தான் பள்ளிகள் வழக்கம் போல் தொடங்கப்பட்டு, செயல்பட்டு வருகின்றது.

நாடு முழுவதும் நாளை (ஜூன் 20) முதல் பள்ளி & அரசு அலுவலகங்கள் மூடல் – அதிரடி உத்தரவு

மற்ற செயல்பாடுகளும் இயல்பு நிலையை அடைந்துள்ளன. இந்நிலையில், தமிழகத்தில் தற்போது கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தொற்றின் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு வருகின்றது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மீண்டும் பதற்ற நிலை எழுந்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் தான் நோய் பாதிப்பு அதிக அளவில் உள்ளது குறிப்பித்தக்கது. தமிழகத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி 500 என்ற எண்ணிக்கையை தாண்டி உள்ளது.

Exams Daily Mobile App Download

இவற்றால் சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 200 ஆக உள்ளது. மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் சுகாதார துறை முதன்மை செயலாளர் செந்தில் குமார் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிக்கை அனுப்பியுள்ளார். அதில், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் 100 படுக்கைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். லேசான அறிகுறிகள் இருந்தால் பாரசிட்டாமல், சிங்க், வைட்டமின் சி மாத்திரைகள் வழங்கி தனிமைப்படுத்த வேண்டும். வீட்டுத் தனிமையில் இருப்பவர்களின் ஆக்சிஜன் அளவை ஆக்சி மீட்டர் மூலம் பரிசோதிக்க வேண்டும். வீட்டு தனிமையில் உள்ளவர்களை தொலைபேசி மூலம் தினசரி கண்காணிக்க வேண்டும். பொது இடங்கள், கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், துணிக்கடைகள் போன்றவற்றில், முகக் கவசம் கட்டாயம் அணிவதுடன், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here