பிப்ரவரி 25 வரை மாநிலத்தில் மீண்டும் இரவுநேர முழு ஊரடங்கு அமல் – அரசு அதிரடி உத்தரவு!

0
பிப்ரவரி 25 வரை மாநிலத்தில் மீண்டும் இரவுநேர முழு ஊரடங்கு அமல் - அரசு அதிரடி உத்தரவு!
பிப்ரவரி 25 வரை மாநிலத்தில் மீண்டும் இரவுநேர முழு ஊரடங்கு அமல் - அரசு அதிரடி உத்தரவு!
பிப்ரவரி 25 வரை மாநிலத்தில் மீண்டும் இரவுநேர முழு ஊரடங்கு அமல் – அரசு அதிரடி உத்தரவு!

குஜராத்தின் அகமதாபாத் மற்றும் வதோதரா மாவட்டங்களில் கொரோனா தொற்றின் பாதிப்புகள் அதிகரித்து வருவதால் அங்கு பிப்ரவரி 25 வரை இரவு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்று அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு கட்டுப்பாடுகள்:

குஜராத்தில் கடந்த வியாழக்கிழமை நிலவரப்படி 870 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மாநிலத்தில் 13 பேர் நோய் தொற்று பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர். இதனால் மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,864 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,221 பேர் சிகிச்சையில் குணடைந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 12,00,204 ஆக உயர்ந்துள்ளது. நோய் தொற்றின் பாதிப்புகள் குறைந்து வருவதால் கடந்த வெள்ளிக்கிழமை அரசு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது.

PF கணக்கு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – மோசடி எச்சரிக்கை! EPFO அறிவுறுத்தல்!

அதன்படி, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக கடந்த வாரம் முதல் அங்கன்வாடி மையங்கள், மழலையர் பள்ளிகளை மீண்டும் திறக்க குஜராத் அரசு அனுமதித்தது. அகமதாபாத் மற்றும் வதோதரா மாவட்டங்களில் மட்டும் இரவு ஊரடங்கு உத்தரவு பிப்ரவரி 25 வரை நள்ளிரவு 12 மணி முதல் காலை 5 மணி வரை அமலில் இருக்கும் என்று மாநில அரசு உத்தரவிட்டது. சூரத், ராஜ்கோட், பாவ்நகர், ஜூனாகத், ஜாம்நகர் மற்றும் காந்திநகரில் பிப்ரவரி 19 முதல் இரவு ஊரடங்கு நீக்கப்படும் என்றும் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

IPL 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஜாக்பாட் – முதல் போட்டிக்கான 4 ஓவர்சீஸ் வீரர்கள்!

மதம், சமூகம், அரசியல் மற்றும் பிற கூட்டங்களை 75 சதவீத திறனுடன் திறந்த இடங்களிலும், 50 சதவீத திறனுடன் மூடிய அரங்கங்ளிலும் நடத்தலாம். வணிக நிறுவனங்கள் இரவு 11 மணி வரை செயல்படலாம். அகமதாபாத் மற்றும் வதோதராவில் ஊரடங்கு உத்தரவின் போது ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் பார்சல் விநியோகத்தை தொடரலாம் என்று உள்துறை அமைச்சக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் அனைத்து விதிமுறைகளையும் மக்கள் முழுமையாக கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here