செப்.30 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு, புதிய கட்டுப்பாடுகள் – மாநில அரசு அறிவிப்பு!

0
செப்.30 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு, புதிய கட்டுப்பாடுகள் - மாநில அரசு அறிவிப்பு!
செப்.30 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு, புதிய கட்டுப்பாடுகள் - மாநில அரசு அறிவிப்பு!
செப்.30 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு, புதிய கட்டுப்பாடுகள் – மாநில அரசு அறிவிப்பு!

கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில் வருகிற செப்டம்பர் 30ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவதாக மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மேலும் பல புதிய வழிகாட்டு நெறிமுறைகளும் அமலுக்கு வந்துள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பு:

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இரவு ஊரடங்கு உத்தரவை இம்மாதம் 30 ஆம் தேதி வரை நீட்டித்து ஆந்திர மாநில மருத்துவ சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தினமும் இரவு 11 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவை மீறுவோர் மீது பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005 மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) மற்றும் பிற விதிமுறைகளின் பிரிவு 188 ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.

1 முதல் 5ம் வகுப்பு வரை செப்.21ம் தேதி பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!

மேலும், திருமண நிகழ்வுகளுக்கு 150 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் காலையில் திருமணங்கள் இருந்தால், முன் அனுமதி தேவை என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. கொரோனா நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. இந்த விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

IPL திருவிழா ஆரம்பம் – CSK vs MI : பழி தீர்க்குமா தோனியின் படை? நேருக்கு நேர் & உத்தேச 11 அணி!

அலுவலகங்கள், நிறுவனங்கள், வணிக வளாகங்கள் மற்றும் கடைகளில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. அந்நிறுவனத்தை 2-3 நாட்களுக்கு மூட நடவடிக்கை எடுக்கப்படும். ஆந்திராவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20,37,353 ஆக உள்ளது. மேலும் பலி எண்ணிக்கை 14,061 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 14,653 பேர் கொரோனா தொற்று பாதிப்பினால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!