தமிழகத்தில் ஜூன் 7க்கு பின்னர் முழு ஊரடங்கு நீட்டிப்பு? முதல்வர் விளக்கம்!

1
தமிழகத்தில் ஜூன் 7க்கு பின்னர் முழு ஊரடங்கு நீட்டிப்பு? முதல்வர் விளக்கம்!
தமிழகத்தில் ஜூன் 7க்கு பின்னர் முழு ஊரடங்கு நீட்டிப்பு? முதல்வர் விளக்கம்!
தமிழகத்தில் ஜூன் 7க்கு பின்னர் முழு ஊரடங்கு நீட்டிப்பு? முதல்வர் விளக்கம்!

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று கடந்த சில நாட்களாக குறைந்து கொண்டே வரும் நிலையில், தற்போது அமலில் உள்ள முழு ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா? என்பதற்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ள வீடியோ பதிவில் விளக்கம் அளித்துள்ளார்.

ஊரடங்கு நீட்டிப்பு?

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்றதும், தீவிர கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் மே 10 முதல் முழு ஊரடங்கு உத்தரவு இரண்டு வார காலத்திற்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கில் தினசரி காலை 10 மணிவரை கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் கொரோனா தொற்று பரவல் நாள்தோறும் அதிகரித்து கொண்டே சென்றது. எனவே மே 24 முதல் எவ்வித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு அமலானது.

தமிழக அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் காலிப்பணியிடங்கள் விவரம் – அரசு உத்தரவு!!

போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். தேவையின்றி வெளியே சுற்றுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த முழு ஊரடங்கு ஜூன் 7 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இம்முறை மளிகை பொருட்களை வீடுகளுக்கு நேரடியாக சென்று விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நீட்டிக்கப்பட்ட முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருவது ஊரடங்கின் பலனை காண்பிப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

TN Job “FB  Group” Join Now

ssc

தினசரி பாதிப்பு 35 ஆயிரம் வரை இருந்த நிலையில் நேற்று அது 27 ஆயிரமாக குறைந்து உள்ளது. மறுபுறம் பலி எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் உள்ளது. எனவே இதனை மேலும் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு இன்னும் சில நாட்களுக்கு தேவை என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் ஜூன் 7க்கு பின்னர் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? அல்லது தளர்வுகள் அளிக்கப்படுமா? என பொதுமக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்ததால் ஊரடங்கில் கடைகள் திறப்பு உள்ளிட்ட தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ரூ.2000 முதல் தவணை பெறாதவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!!

இந்நிலையில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றினை வெளியிட்டு உள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, பொதுமக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றினால் ஊரடங்கிற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைத்து விடலாம். அடித்தட்டு மக்களின் பொருளாதாரம் பாதிப்படைவதை கருத்தில் கொண்டு, 4000 ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படுகிறது. 13 மளிகைப் பொருட்கள் தொகுப்பும் வழங்க உள்ளது அரசு. ஊரடங்கை மேலும் நீட்டித்து கொண்டே செல்ல முடியாது. விரைவில் கொரோனாவிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என உறுதிபட தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. i am a brain stroke & paralysis patient left side affected leg &shoulder hand, fingers i cannot normal walk, left eye irritation, foot ,irritation, shoulder pain hip pain, back pain, thigh muscle pain, use allopathy medicine till now no recovery sir, please help me Ayurveda medicine to cure please help me sir, Dalmia colony no vegetables & fruits &Groceries till now is not coming please help me sir

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!