தமிழகத்தில் ஜூலை 6ம் தேதி உள்ளூர் விடுமுறை – வலுக்கும் கோரிக்கை! அரசின் முடிவு என்ன?

0
தமிழகத்தில் ஜூலை 6ம் தேதி உள்ளூர் விடுமுறை - வலுக்கும் கோரிக்கை! அரசின் முடிவு என்ன
தமிழகத்தில் ஜூலை 6ம் தேதி உள்ளூர் விடுமுறை - வலுக்கும் கோரிக்கை! அரசின் முடிவு என்ன
தமிழகத்தில் ஜூலை 6ம் தேதி உள்ளூர் விடுமுறை – வலுக்கும் கோரிக்கை! அரசின் முடிவு என்ன?

தமிழகத்தில் குமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் 450 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதனால் இந்த கும்பாபிஷேகத்தை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாட ஏதுவாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆதிகேசவ பக்தர் சங்க டிரஸ்ட் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அரசிடம் கும்பாபிஷேகத்தை கொண்டாட அத்தினத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் விடுமுறை:

தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து தற்போது அனைத்து கோவில் திருவிழாக்களும் வழக்கம் போல கொண்டாடப்பட்டு வருகிறது. அத்துடன் இதில் பக்தர்கள் கலந்து கொள்ளவும் அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து குமரி மாவட்டத்தில் உள்ள மிகவும் புகழ்பெற்ற கோவிலான திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் 450 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்த உள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வருகிற ஜூலை 6ம் தேதி அன்று இந்த கும்பாபிஷேகத்தை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 450 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் இதனை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று கோவில் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஆதிகேசவ பக்தர் சங்க டிரஸ்ட் சார்பாக ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு கோரிக்கைகளை கொண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் குறிப்பாக கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள தமிழக முதல்வரை அழைக்க அரசுக்கு கோரிக்கை வைப்பது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் பக்தர்களின் வசதிக்காக அனைத்து பகுதிகளில் இருந்தும் திருவட்டாருக்கு பஸ் வசதி ஏற்படுத்துவது, அத்துடன் கும்பாபிஷேகத்தை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாட வருகிற ஜூலை 6ம் தேதி அன்று குமரி மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவை மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்க அரசுக்கு கோரிக்கை வைப்பது உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனால் அரசு இது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிற ஜூலை 6ம் தேதி அன்று குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here