ஞாயிற்றுக்கிழமை வந்த உள்ளூர் விடுமுறை… மாணவர்கள் கவனத்திற்கு!
தமிழகத்தில் மகா கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு நவ.19 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் விடுமுறை:
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. இதனை காண்பதற்காக பல மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் அண்ணாமலையார் கோவிலுக்கு வருவதுண்டு. அந்த வகையில், இந்தாண்டு நவம்பர் 19ம் தேதி மாலை 6 மணியளவில் 2,668 அடி உயரத்தில் மகா தீபம் ஏற்றப்பட இருக்கிறது.
TNPSC குரூப் 4 2023 தேர்வு எப்போது? அறிவிப்பு வெளியீடு!!!
இந்த தீப திருநாளை முன்னிட்டு பல ஊர்களில் இருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மகா கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு நவ.19 ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மகா தீபத்தை காண வரும் பக்தர்களுக்காகவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.