தமிழகத்தில் வருகிற ஜூலை 11ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் வருகிற ஜூலை 11ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
தமிழகத்தில் வருகிற ஜூலை 11ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
தமிழகத்தில் வருகிற ஜூலை 11ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லையப்பர் காந்தி அம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு ஜூலை 11ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விடுமுறை மாநில அரசு அலுவலகங்களுக்கும், பள்ளி, கல்லூரிகளுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் விடுமுறை:

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள திருத்தலங்களில் ஆண்டுதோறும் திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திருவிழாக்களை முன்னிட்டு மக்கள் அதை சிறப்பாக கொண்டாடும் வகையில் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அன்றைய தினம் உள்ளூர் விடுறையை அறிவித்து வருகிறது. மேலும், இப்பண்டிகைகளில் அம்மாவட்ட மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்ட மற்றும் மற்ற மாநில மக்களும் கலந்து கொள்கின்றனர். அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காந்தி அம்மன் கோவில் தேரோட்ட விழா நடைபெற உள்ளது. இந்த நெல்லையப்பர் கோயில், புகழ் பெற்ற தலங்களில் ஒன்றாகும். மேலும் காந்திமதி அம்மை வடிவுடை அம்மை, திருக்காமக்கோட்டம் உடைய நாச்சியார் என்று அழைக்கப்படுகிறார்.

TN Job “FB  Group” Join Now

மேலும் இத்திருத்தலத்தில் காந்திமதி அம்மனுக்கு வெள்ளிக்கிழமைகளில் தங்கப் பாவாடை அலங்காரம் செய்யப்படுவது வழக்கம். அத்துடன் இத்திருத்தலம் அம்பிகையின் 51 சக்தி பீடங்களுள் இது காந்தி பீடமாகத் திகழ்கிறது. குறிப்பாக, ஆண்டுதோறும் புரட்டாசி மாத இறுதியில், ஐப்பசி மாதத் தொடக்கத்தில், காந்திமதி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் திருக்கல்யாண உற்சவம் நடத்தப்பட்டு வருகிறது. இத்தலத்தின் தேர் தமிழ்நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய தேர் என்ற பெருமைக்குரியது. அத்தகைய தேர் திருவிழா வரும் ஜூலை 11ம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அன்றைய தினம் திருநெல்வேலி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை: அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!

இந்த உள்ளூர் விடுமுறை அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும், அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த விடுமுறை நாளில் பள்ளி மாணவர்களுக்கு அரசு பொதுத்தேர்வுகள் ஏதும் இருந்தால் அவர்களுக்கு தேர்வு நடைபெறும். அதனால் அத்தைகைய பள்ளிகள் மற்றும் பொதுத்தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்ய ஈடு செய்யும் வகையில் 23ம் தேதி (சனிக்கிழமை) அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here