தமிழகத்தின் இம்மாவட்டத்தில் செப்.8ம் தேதி உள்ளூர் விடுமுறை – ஆட்சியர் உத்தரவு!

0
தமிழகத்தின் இம்மாவட்டத்தில் செப்.8ம் தேதி உள்ளூர் விடுமுறை - ஆட்சியர் உத்தரவு!
தமிழகத்தின் இம்மாவட்டத்தில் செப்.8ம் தேதி உள்ளூர் விடுமுறை - ஆட்சியர் உத்தரவு!
தமிழகத்தின் இம்மாவட்டத்தில் செப்.8ம் தேதி உள்ளூர் விடுமுறை – ஆட்சியர் உத்தரவு!

தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் செப்.8 ம் தேதி அன்று ஓணம் பண்டிகையை முன்னிட்டு அன்று ஒரு நாள் உள்ளூர் விடுமுறை தினமாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

உள்ளூர் விடுமுறை:

தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்படும் விழாக்கள், சிறப்பு தினங்களுக்கு மற்றும் பண்டிகைகளுக்கு தமிழக அரசு மாநிலம் முழுவதும் விடுமுறை அளித்து உத்தரவு வழங்கும். அப்படி, மாநிலம் முழுவதும் சிறப்பிக்கப்படாமல் தமிழகத்தின் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் சிறப்பிக்கப்படும் பண்டிகைகள் மற்றும் விழாக்களுக்கு தமிழக அரசு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்களின் அரசு அலுவலங்கள் மற்றும் கல்வி நிலையங்கள் உள்ளிட்டவை விடுமுறை அளிக்கப்படும்.

கேரளா மாநிலத்தில் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும் நிகழ்ச்சி ஆகும். கோவை மாவட்டத்தில் அதிக அளவில் கேரளாவை சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர். இதனால், அவர்கள் ஓணம் பண்டிகையை சிறப்பிக்க ஏதுவாக கோவை மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்படுமா என்று மக்கள் எதிர்பார்த்து இருந்தனர். இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் அவர்கள் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை மாவட்டத்திற்கு வரும் செப்டம்பர் 8ம் தேதி வியாழக்கிழமை அன்று உள்ளூர் விடுமுறை நாளாக அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.

TNPSC குரூப் 1 தேர்வர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

மேலும், அறிக்கையில் இந்த உள்ளூர் விடுமுறை வங்கிகளுக்கு பொருந்தாது என்றும், மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலை கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு அரசு காப்பு தொடர்பாக அவசர பணிகளை கவனிப்பதற்காக செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்.8ம் தேதி உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில், செப்டம்பர் 17ம் தேதியான சனிக்கிழமை அன்று முழு பணி நாளாக இருக்கும் என்றும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!