தமிழகத்தில் ஆண்டுதோறும் நவம்பர் 1ம் தேதி உள்ளாட்சி தின கொண்டாட்டம் – முதல்வர் அறிவிப்பு!

0
தமிழகத்தில் ஆண்டுதோறும் நவம்பர் 1ம் தேதி உள்ளாட்சி தின கொண்டாட்டம் - முதல்வர் அறிவிப்பு!
தமிழகத்தில் ஆண்டுதோறும் நவம்பர் 1ம் தேதி உள்ளாட்சி தின கொண்டாட்டம் - முதல்வர் அறிவிப்பு!
தமிழகத்தில் ஆண்டுதோறும் நவம்பர் 1ம் தேதி உள்ளாட்சி தின கொண்டாட்டம் – முதல்வர் அறிவிப்பு!

தமிழகத்தில், இனி வருடம்தோறும் உள்ளாட்சி தினம் மீண்டும் நவம்பர் 1-ம் தேதி கொண்டாடப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன் மூலம் உள்ளாட்சி அமைப்பின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும்.

ரேஷன் கடையில் வேலைவாய்ப்பு :

தமிழக சட்டப்பேரவையில் கடந்த மார்ச் மாதம் 18-ம் தேதி பொது நிதிநிலை அறிக்கையும், அதற்கு மறுநாள் வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டன. அதன் மீதான விவாதங்களுக்கு அத்துறை அமைச்சர்கள் பதில் அளித்ததைத் தொடர்ந்து பட்ஜெட் கூட்டத் தொடர் 24-ம் தேதி நிறைவடைந்தது. இந்நிலையில் ஏப்ரல் 6-ந்தேதி முதல் தமிழக சட்டசபையில், துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். இந்த கூட்டத்தொடர், மே 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது மன்னார்குடி தொகுதி நீடாமங்கலம் ஒன்றியம் கட்டக்குடி ஊராட்சியில் உள்ள நியாயவிலைக் கடைக்கு கட்டடம் கட்ட அரசு முன்வருமா என திமுக மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்பி. ராஜா கேள்வி எழுப்பினார்.

ExamsDaily Mobile App Download

அதற்கு, தமிழகம் முழுவதும் 6 ஆயிரம் ரேஷன் கடைகள் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இப்போது பகுதி நேரமாக செயல்படும் 700 கடைகளும் வாடகை கட்டிடத்திலேயே இயங்கி வருகின்றன. இந்த கடைகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி 500 கடைகள் வீதம் கட்டிடம் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.  மேலும் ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதியின் மூலமாக நியாயவிலை கடைகளுக்கு சொந்தக் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. மேலும், நியாயவிலைக் கடைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பணிகள் அதிவேகமாக நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தமிழகத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் – ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு!

இந்நிலையில் ஊரக மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் மக்களுக்கும் இடையிலான தொடர்புகள் மற்றும் நல்லுறவை மேம்படுத்தும் வகையிலும் உள்ளாட்சி அமைப்புகளின் பணிகளை தொடர்புடைய பகுதிகளில் வாழும் மக்களுக்குத் தெரிவிக்கும் வகையிலும் உள்ளாட்சி தின விழாவை நவம்பர் 1-ம் தேதி ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் நடத்த வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நிறைவேற்றப்பட்ட வளர்ச்சிப் பணிகள் மற்றும் தனிநபர்களுக்கு வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள் ஆகியவற்றின் விவரங்களை சுவர் விளம்பரம், பதாகைகள், விழிப்புணர்வுப் பேரணி, கருத்துப் பட்டறைகள் மற்றும் மக்கள் குறைதீர்க்கும் நிகழ்ச்சிகள் நடத்துதல் போன்றவற்றின் மூலம் வெளிப்படுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டு உள்ளது. இதையடுத்து தமிழகத்தில் 6 கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!