தமிழகத்தில் பிப்.19 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – பிப்.17 முதல் தேர்தல் பிரச்சாரத்திற்கு தடை!

0
தமிழகத்தில் பிப்.19 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - பிப்.17 முதல் தேர்தல் பிரச்சாரத்திற்கு தடை!
தமிழகத்தில் பிப்.19 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - பிப்.17 முதல் தேர்தல் பிரச்சாரத்திற்கு தடை!
தமிழகத்தில் பிப்.19 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – பிப்.17 முதல் தேர்தல் பிரச்சாரத்திற்கு தடை!

தமிழகத்தில் பிப்ரவரி 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிப்ரவரி 17 மாலை 6 மணிக்கு மேல் தேர்தல் பிரசாரங்களுக்கு அனுமதி இல்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் பிரசாரம்:

தமிழகத்தில் உள்ள 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர்கள், 7,621 பேரூராட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் நெருங்கி விட்டதை அடுத்து அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. மேலும் தேர்தலன்று வாக்குரிமை உள்ள அனைவருக்கும் விடுப்பு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே வாக்களிக்க விடுப்பு எடுப்பவர்களுக்கு ஊதிய குறைப்பு மற்றும் ஊதிய பிடித்தம் போன்றவைகள் செய்ய கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது.

தமிழக ரேஷன் கார்டில் குடும்ப உறுப்பினர் பெயரை நீக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்!

இதனை மீறும் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவை தொடர்ந்து பிப்ரவரி 22ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதனையடுத்து வாக்கு மையங்கள், வாக்கு எண்ணிக்கை சாவடிகள் 5 மீட்டர் சுற்றளவில் உள்ள மதுக்கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய காஞ்சிபுரம், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு வார்டுகளில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் துறை வேலைவாய்ப்பு – பிப்ரவரி 22 கடைசி நாள்!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியானதை அடுத்து அரசியல் கட்சியினர் வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு வார்டுகளில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. வேட்பாளர்கள் வாக்குறுதிகளை வழங்கிய வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிகளின்படி வாக்குப்பதிவிற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு தேர்தல் பரப்புரை நிறுத்தப்பட வேண்டும். அதன்படி பிப்ரவரி 17 மாலை 6 மணிக்கு மேல் தேர்தல் பிரச்சாரங்களுக்கு அனுமதி இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!