SBI வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் – ரூ.35 லட்சம் வரை கடன்!

0
SBI வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் - ரூ.35 லட்சம் வரை கடன்!
SBI வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் - ரூ.35 லட்சம் வரை கடன்!
SBI வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் – ரூ.35 லட்சம் வரை கடன்!

வாடிக்கையாளர்களுக்கு ரூ.35 லட்சம் வரை கடன் பெறும் வசதியை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஏற்படுத்தியுள்ளது. மேலும் ரியல்-டைம் எக்ஸ்பிரஸ் கிரெடிட் (RTXC) அம்சத்தை அணுக YONO செயலி பயன்பாட்டைப் பயன்படுத்தலாம் எனவும் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ரூ.35 லட்சம் வரை கடன்:

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.35 லட்சம் வரை எக்ஸ்பிரஸ் கடன் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஆனால், இந்த கடனை வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ வங்கியின் YONO (யோனோ) செயலி மூலம் தான் பெற முடியும். முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டு இந்த கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் கடன் பெறுவதற்காக வங்கிக்கு நேரடியாக வரத் தேவையில்லை என்பதற்காக எஸ்பிஐ ரியல் டைம் எக்ஸ்பிரஸ் கிரெடிட் (ஆர்டிஎஸ்சி) பெர்ஷனல் லோன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இது குறித்து எஸ்பிஐ வங்கி வெளியிட்ட அறிவிப்பில் வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் ரீதியில் அதிகாரம் வழங்கும் நோக்கில் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி, ரியல் டைம் எக்ஸ்பிரஸ் கிரெடிட் கடனுதவி திட்டத்தை யோனோ ஆப்ஸ் மூலம் வழங்குகிறது. மேலும் ஊதியம் பெறும் வாடிக்கையாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டம், டிஜிட்டல் அவதாரம் எடுத்துள்ளது.

யோனோ செயலி மூலம் கடன் பெற விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு எந்த விதமான ஆவணங்களையும் நேரடியாக அளிக்க வேண்டியதில்லை. அனைத்தையும் டிஜிட்டலாக பதிவேற்றம் செய்யலாம். இதையடுத்து 8 விதமான செயல்பாடுகள் மூலம் எளிதாக தனிநபர் கடன் பெறலாம். கடனுதவி பெறத்தகுதியை தீர்மானித்தல், கிரெடிட் பரிசோதனை, ஆவணம் பரிசீலனை உள்ளிட்ட அனைத்தும் டிஜிட்டல் முறையில் நடத்தப்பட்டு கடன் விண்ணப்பதாரருக்கு தகவல் தெரிவிக்கப்படும். அனைத்து தகுதிகளும் இருக்கும் பட்சத்தில் உடனடியாக கடன் உதவி வழங்கப்படும்.

தகுதி:

எஸ்பிஐ வங்கியில் ஊதியக் கணக்கு வைத்துள்ள மத்திய அரசில் பணியாற்றும் ஊழியர்கள், மாநில அரசுகளில் பணியாற்றும் ஊழியர்கள், பாதுகாப்பு துறையில் பணியாற்றுவோர் ஆகியோருக்கு இது பொருந்தும்

இது தவிர எஸ்பிஐ வங்கியில் மாத ஊதியக் கணக்கு வைத்திருப்போர்.

குறைந்தபட்சமாக மாதம் ரூ.15 ஆயிரம் ஊதியம் பெறுவோர்

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுவோர், மாநில அரசுகளின் நிறுவனங்களில் பணியாற்றுவோர், தேசிய அளவில் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் பணியாற்றுவோர், சில தேர்வு செய்யப்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியாற்றுவோர் ஆகியோர் ரூ.35 லட்சம் வரை கடன் பெற தகுதியானவர்கள் ஆவார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!