சன் டிவி புதிய சீரியலில் ரீ என்ட்ரி தரும் பிரபல நடிகரின் மகள் – ரசிகர்கள் உற்சாகம்!

0
சன் டிவி புதிய சீரியலில் ரீ என்ட்ரி தரும் பிரபல நடிகரின் மகள் - ரசிகர்கள் உற்சாகம்!
சன் டிவி புதிய சீரியலில் ரீ என்ட்ரி தரும் பிரபல நடிகரின் மகள் - ரசிகர்கள் உற்சாகம்!
சன் டிவி புதிய சீரியலில் ரீ என்ட்ரி தரும் பிரபல நடிகரின் மகள் – ரசிகர்கள் உற்சாகம்!

தமிழ் திரையுலகில் குணசித்திர நடிகராக புகழ் பெற்றவர் லிவிங்ஸ்டன். அவரது மகள் ஜோவிதா சன் டிவி சீரியலில் இருந்து விலகிய நிலையில், தற்போது மீண்டும் புதிய சீரியலில் களமிறங்க உள்ளார்.

நடிகர் லிவிங்ஸ்டன் மகள்:

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல் மூலமாக புகழடைந்தவர்கள் பலர். இந்நிலையில் தமிழில் சொல்லாமலே, விரலுக்கு ஏத்த வீக்கம் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாகவும், பல படங்களில் குணச்சித்திர வேடத்திலும் நடித்து பிரபலமானவர் நடிகர் லிவிங்ஸ்டன். அவரது மகள் ஜோவிதாவும் சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்தார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக சீரியலில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வந்த அவர், திடீரென அந்த சீரியலில் இருந்து விலகியதாக அறிவித்தார்.

ரோஜா மீது தாய் பாசத்தை காட்டும் செண்பகம், ரசிகர்கள் நெகிழ்ச்சி – இன்றைய எபிசோட் ப்ரோமோ!

இது குறித்து பேசிய லிவிங்ஸ்டன், சீரியலில் இருந்து தனது மகள் விலக நிறைய காரணம் உள்ளது எனவும், அதை சொல்லி அவர்களை தான் நோகடிக்க விரும்பவில்லை என கூறினார். அதன் பின்னர் அவரது மகள், ‘கலாசல்’ என்னும் திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் வெளிவரவில்லை. இருந்தாலும் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகாமல் இருந்தார். இந்நிலையில், தற்போது ஜோவிதா மீண்டும் சன் டிவியின் புதிய சீரியலில் நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அடுத்த வார எபிசோட் – வெளியான புகைப்படம்!!

இந்த புதிய சீரியல் கன்னட சீரியலின் ரீமேக்காக உருவாகும் இந்த சீரியலில் ஜோவிதா நடிக்கவுள்ளார் என்றும் அவருடன் கார்த்திக் வாசு மற்றும் நடிகை அம்பிகா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இவரது ரசிகர்கள் ரீ என்ட்ரிக்கு மிகவும் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் இவர் தந்தை போல இவரும் நல்ல நடிகையாக வர வேண்டும் என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!