உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்களை கொண்ட நாடுகளின் பட்டியல் – ஆய்வு அறிக்கை!

0
உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்களை கொண்ட நாடுகளின் பட்டியல் - ஆய்வு அறிக்கை!
உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்களை கொண்ட நாடுகளின் பட்டியல் - ஆய்வு அறிக்கை!
உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்களை கொண்ட நாடுகளின் பட்டியல் – ஆய்வு அறிக்கை!

உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்களை கொண்ட நாடுகளின் பட்டியலை ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியா இந்த பட்டியலில் 90 வது இடத்தில் உள்ளது.

சக்திவாய்ந்த பாஸ்போர்ட்:

ஒரு நாட்டை சேர்ந்தவர்கள் மற்ற நாடுகளுக்கு செல்வதற்கு பாஸ்போர்ட் மிகவும் அத்தியாவசிய ஆவணமாகும். இது இல்லாமல் உலகின் எந்த பகுதிக்கும் பயணிக்க முடியாது. அதன்படி, பயணத்திற்கு ஏற்ற பாஸ்போர்ட்களை கொண்ட உலக நாடுகளின் பட்டியலை ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் ஆண்டுதோறும் ஆய்வு செய்து அறிக்கையாக வெளியிடுகிறது. அதன்படி பாஸ்போர்ட் மூலம் விசா இல்லாமல் மற்ற நாடுகளுக்கு பயணிக்க சில நாடுகளில் அனுமதி உள்ளது.

‘ஒரே நாடு ஒரே கார்டு’ திட்டத்தில் மேலும் புதிய கட்டுப்பாடுகள் – மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசனை!

குறிப்பிட்ட நாடுகளின் பாஸ்போர்ட் இருந்தால் அனுமதிக்கப்பட்ட மற்ற நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம். ஒரு நாட்டின் பாஸ்போர்ட்டை வைத்து கொண்டு ஒருவர் எத்தனை நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடிகிறது என்பதை கணக்கிட்டு, அதன் அடிப்படையில் நாடுகள் இந்த ஆய்வில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்தியா கடந்த ஆண்டில் 84 வது இடத்தில் இருந்து தற்போது 90 வது இடத்திற்கு சென்றுள்ளது. இந்திய பாஸ்போர்ட்டு வைத்திருப்பவர்கள் ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட 58 நாடுகளுக்கு விசா இல்லாமல் சென்று வரலாம்.

தமிழகத்தில் 5 மாதங்களில் 63 மின் விபத்துகள் – விபத்து குறித்து ஆய்வுபணிகளுக்கு உத்தரவு!

ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் பாஸ்போர்ட்டுடன் 192 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம். அமெரிக்கா பாஸ்போர்ட்டுடன் 185 நாடுகளுக்கு செல்ல முடியும். அமெரிக்கா இந்த பட்டியலில் 7 வது இடத்தில உள்ளது. தென் கொரியா மற்றும் ஜெர்மனி நாடுகள் பட்டியலில் 2 வது இடத்தையும், பின்லாந்து, இத்தாலி, லக்சம்பர்க், ஸ்பெயின் நாடுகள் 3-வது இடத்தையும் ஆஸ்திரியா, டென்மார்க் நாடுகள் 4-வது இடத்தையும் பிடித்துள்ளது. ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா, பாகிஸ்தான் மற்றும் ஏமன் உள்ளிட்டவை குறைந்த சக்திவாய்ந்த நாடுகளாக பட்டியலின் கடைசி இடத்தில் உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Download=> Mobile APPDownload செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here