FD திட்டத்திற்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகளின் பட்டியல் – முழு விபரங்கள் இதோ!

0
FD திட்டத்திற்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகளின் பட்டியல் - முழு விபரங்கள் இதோ!
FD திட்டத்திற்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகளின் பட்டியல் - முழு விபரங்கள் இதோ!
FD திட்டத்திற்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகளின் பட்டியல் – முழு விபரங்கள் இதோ!

இந்தியாவில் வங்கிகளில் பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளன. இதில் நிலையான வைப்புத்தொகை எனப்படும் ஃபிக்சட் டெபாசிட் மிகவும் பாதுகாப்பான மற்றும் பொதுமக்களிடையே வரவேற்புக்குரிய திட்டமாக உள்ளது. தற்போது இந்த திட்டத்திற்கு எந்தெந்த வங்கிகளில் எவ்வளவு வட்டி விகிதம் வழங்கப்படுகிறது என்பது பற்றிய முழு விவரத்தை பற்றி பார்ப்போம்.

FD திட்டம்:

இந்தியாவில் அரசு பொதுத்துறை வங்கி மற்றும் தனியார் துறை வங்கிகளில் உள்ள சேமிப்பு திட்டங்களில் அதிகளவு முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர். ஏனெனில் கொரோனா போன்ற பேரிடர் காலங்களில் இந்த சேமிப்பு தொகை பயனாளிகளுக்கு பேருதவியாக உள்ளது. மேலும் இதில் உள்ள நிலையான சேமிப்பு திட்டத்தில் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து வங்கிகளில் நிலையான வைப்பு தொகைக்கான காலத்தை 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை உள்ளது. இதில் தங்களின் விருப்பத்திற்கேற்ற ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.

இந்த ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் காலத்திற்கு ஏற்ப வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த திட்டம் நீண்ட கால சேமிப்பிற்கு மட்டுமே மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மேலும் முதிர்வு காலம் முடியும் முன் இத்திட்டத்தில் உள்ள கணக்கை முடித்தால் முழுமையான லாபத்தை பெற முடியாது. தற்போது ஃபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு எந்தெந்த வங்கிகளில் எவ்வளவு வட்டி விகிதம் வழங்கப்படுகிறது என்பதை பார்ப்போம். ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் இணைய உள்ள வாடிக்கையாளர்கள் இந்த பதிவை கட்டாயமாக தெரிந்து கொள்ள வேண்டும்.

FD வட்டி விகிதம்

கீழ்க்கண்ட வங்கிகளில் 1 வருட காலத்திற்கு வழங்கப்படும் வட்டி விகிதம்:

1. ஆர்பிஎல் வங்கி – 6.25% வட்டி விகிதம்

2. இந்தஸ்இந்த் வங்கி – 6% வட்டி விகிதம்

3. பந்தன் பேங்க் – 5.75% வட்டி விகிதம்

4. ஐடிஎஃப்சி வங்கி – 5.75% வட்டி விகிதம்

5. டிசிபி பேங்க் – 5.5% வட்டி விகிதம்.

கீழ்க்கண்ட வங்கிகளில் 2 வருட காலத்திற்கு வழங்கப்படும் வட்டி விகிதம்:

1. இந்தஸ்இந்த் வங்கி – 6.50% வட்டி விகிதம்

2. ஆர்பிஎல் வங்கி – 6.50% வட்டி விகிதம்

3. பந்தன் பேங்க் – 6.25% வட்டி விகிதம்

4. ஐடிஎஃப்சி வங்கி – 6.25% வட்டி விகிதம்

5. டிசிபி பேங்க் – 5.75% வட்டி விகிதம்

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!