மே மாதம் மீதமுள்ள வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

0
மே மாதம் மீதமுள்ள வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல் - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
மே மாதம் மீதமுள்ள வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல் - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
மே மாதம் மீதமுள்ள வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வழிகாட்டுதல்களின் படி பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு, கூட்டுறவு வங்கிகள் மற்றும் இந்தியாவில் உள்ள பிராந்திய வங்கிகள் ஆகியவை குறிப்பிட்ட தேதிகளில் மூடப்பட்டிருக்க வேண்டும். அந்த வகையில் நடப்பு மாதத்தில் மீதமுள்ள வங்கி விடுமுறைகள் குறித்து வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்வது நல்லது.

விடுமுறை நாட்களின் பட்டியல்:

நாடு முழுவதும் உள்ள வங்கிகள் அனைவருக்குமான மிக அத்தியாவசிய சேவைகளை வழங்கும் நிறுவனங்களாக உள்ளன. சேமிப்பு, முதலீடு, பணம் எடுப்பது, பணம் போடுவது, பணம் அனுப்புவது, கடன் பெறவும் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு வங்கிகள் அவசியமாக உள்ளது. இதுமட்டுமல்லாமல் அரசு திட்டங்களின் பலன்களை பெறுவது, சம்பளம் எடுப்பது, பென்சன் பெறுவது என ஒவ்வொரு நபருக்கும் பணம் சார்ந்த மிக முக்கிய சேவைகளை வழங்குவதில், வங்கிகள் முக்கியப் பங்கு வகிக்கிறது.

Exams Daily Mobile App Download

எனவே, வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் வங்கி விடுமுறை நாட்களை தெரிந்து கொள்வது அவசியம் ஆகும். இதன் மூலம் தேவையில்லாத அலைச்சலையும், நேர விரயத்தையும் தவிர்க்க முடியும். ஒவ்வொரு மாதமும் ஞாயிற்றுக் கிழமைகளில் அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை. அதுபோல இரண்டாவது சனிக்கிழமை, நான்காம் சனிக்கிழமை நாட்களிலும் விடுமுறை அளிக்கப்படும். அந்த வகையில் நடப்பு மாதத்தில் மே 14 மற்றும் மே 28 ஆகிய இரண்டு நாட்கள் விடுமுறை. அதேபோல ஞாயிற்று கிழமைகள் விடுமுறை என்பதால் மே 1, மே 8, மே 15, மே 21, மே 29 ஆகிய ஐந்து நாட்களும் வங்கிகளுக்கு விடுமுறை ஆகும்.

நாட்டின் நெருக்கடி நிலையால் மூடப்படும் பள்ளிகள் – அவசர கால நடவடிக்கை!

மேலும் பொது விடுமுறை நாட்களில் வங்கிகளுக்கும் விடுமுறை உண்டு. 2022 ஆம் ஆண்டின் ஐந்தாவது மாதமான மே மாதம் முடிய இன்னும் சில நாட்களே உள்ளன. இந்த மாதம் மொத்தம் 11 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என இந்திய ரிசர்வ் வங்கி விடுமுறை பட்டியலில் குறிப்பிட்டு இருந்தது. அதுமட்டுமின்றி மீதமுள்ள மே மாத நாட்களில், வங்கிகள் மொத்தம் 3 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விடுமுறை நாட்களில் வாடிக்கையாளர்களுக்கு வங்கி தொடர்பான பணிகள் எதுவும் இருந்தால், அதை திட்டமிட்டு விரைந்து முடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

  • மே 22, 2022: ஞாயிறு
  • மே 28, 2022: சனிக்கிழமை
  • மே 29, 2022: ஞாயிறு
  • TNPSC Online Classes
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!