ஜூலை மாதம் மீதமுள்ள வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

0
ஜூலை மாதம் மீதமுள்ள வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல் - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
ஜூலை மாதம் மீதமுள்ள வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல் - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
ஜூலை மாதம் மீதமுள்ள வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

இந்தியாவின் பல பகுதிகளில் உள்ள தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் வாடிக்கையாளர்கள் இம்மாதம் அதிக விடுமுறை உள்ளதால் வங்கி பணிகளை முன்னதாகவே திட்டமிட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஜூலை மாதத்தில் மீதமுள்ள வங்கி விடுமுறை நாட்களை பற்றி பார்க்கலாம்.

வங்கி விடுமுறை:

வங்கிகள் நமது பணத் தேவையைப் பூர்த்தி செய்யும் இடமாகும். வங்கிகளில் சேமித்து வைத்துள்ள பணத்தை எடுக்கவும், கடன் பெறவும் மற்ற பணப் பரிவர்த்தனைகளுக்கும் வங்கிகள் நம் வாழ்வில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. நம்முடைய பணப் பரிவர்த்தனைகளை முன்கூட்டியே திட்டமிட்டு வைத்தால், தேவையற்ற அலைச்சலை தவிர்க்கலாம். எனவே வங்கிகளின் வேலை நாட்கள், விடுமுறை தினம் ஆகியவற்றை முன்கூட்டியே தெரிந்து கொள்வது அவசியம் ஆகும்.

Exams Daily Mobile App Download

ஜூன் மாதம் முடித்து, ஜூலை மாதம் தொடங்கி 7 நாட்கள் ஆகிவிட்டது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி தயாரித்த நாட்காட்டியின் படி வங்கிகளுக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும், 2 வது மற்றும் 4வது சனிக்கிழமையும் விடுமுறை அளிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த மாதத்தில் மொத்தம் 8 விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் 2 விடுமுறை நாட்கள் முடிந்து விட்டது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் மீதமுள்ள விடுமுறை நாட்கள் 6 நாட்கள் ஆகும். ஜூலை 10, 17, 24, 31 ஆகிய 5 நாட்களும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்று வங்கிகள் இயங்காது. அதேபோல், ஜூலை 9 இரண்டாவது சனிக்கிழமை என்பதாலும், ஜூலை 23 நான்காவது சனிக்கிழமை என்பதாலும் அன்றும் வங்கிகள் செயல்படாது.

தமிழகத்தில் ஜூலை 8 & 9 முக்கிய ரயில் சேவைகள் ரத்து – ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!

ஒவ்வொரு பகுதியில் நடக்கும் திருவிழாக்களை பொறுத்து வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு கிளைகள் மூடப்பட்டிருக்கும். இது தவிர, தேசிய விடுமுறை நாட்களில் தேசிய அளவில் வங்கி விடுமுறைகள் உள்ளன, இதனால் தனியார் மற்றும் பொதுத் துறைகளில் உள்ள அனைத்து கிளைகளும் மூடப்பட்டிருக்கும். அனைத்து பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய வங்கிகளின் கிளைகள் ரிசர்வ் வங்கியால் அறிவிக்கப்பட்ட விடுமுறை நாட்களில் மூடப்பட்டிருக்கும். இருப்பினும் நெட் பேங்கிங், ஆன்லைன் வங்கி சேவைகளில் எந்த பாதிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூலை 9: இத்-உல்-அதா (பக்ரீத்) – கொச்சி, திருவனந்தபுரம்; இது மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை என்பதால் நாடு முழுவதும் வங்கிகளும் மூடப்படும்

ஜூலை 11: ஈத்-உல்-அஷா – ஸ்ரீநகர், ஜம்மு

ஜூலை 13: பானு ஜெயந்தி – கேங்டாக்

ஜூலை 14: Beh Dienkhlam – ஷில்லாங்

ஜூலை 16: ஹரேலா – டேராடூன்

ஜூலை 26: கேர் பூஜை – அகர்தலா

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!