இனி பேருந்து நிலையங்களில் மதுபான கடைகள் திறப்பு – மாநில அரசு!
கேரள மாநிலத்தில் மது பிரியர்கள் இடையூறின்றி மது வாங்கிச் செல்வதற்கு உரிய வசதிகளை செய்து தர வேண்டும் என்று மாநில அரசுக்கு நீதிமன்றம் வலியுறுத்தியது. அதை தொடர்ந்து KSRTC க்கு சொந்தமான காலி அறைகளில் மதுபானக் கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
மதுபான கடை:
நாடு முழுவதும் மது பிரியர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தமிழகத்தில் அரசுக்கு அதிகமான வருவாயை ஈட்டி தருவதில் முக்கிய பங்கு வகிப்பது டாஸ்மாக். அதே போல் கேரள மாநிலத்தில் பெவ்கோ நிறுவனம் அதிக வருமானம் ஈட்டி தருகிறது. கேரள மாநிலத்தில் மதுபான கடைகள் பெரும்பாலும் தனியார் இடங்களில் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு கடைகளிலும் மதுபானங்கள் வாங்க வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பார்கள்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 31,222 பேருக்கு கொரோனா – 290 பேர் பலி!
அதனை தொடர்ந்து மதுப்பிரியர்கள் இடையூறின்றி மது வாங்கிச் செல்வதற்கு உரிய வசதிகளை செய்து தர வேண்டும் என்று மாநில அரசுக்கு நீதிமன்றம் வலியுறுத்தியது. இதன் அடிப்படையில் மாநில சாலைப் போக்குவரத்து கழகத்திற்கு மாநிலம் முழுவதும் பணிமனைகள் இருப்பதால் இவற்றுக்கு சொந்தமான கட்டிடங்களில் ஏராளமான கடைகள், அறைகள் காலியாக இருப்பதால் காலியிடங்களை மதுக்கடைகள் நடத்துவதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என KSRTC நிர்வாக இயக்குனர் பிஜு பிரபாகர் கூறியுள்ளார்.
இந்த 4 செயலிகளை பயன்படுத்துபவர்களா நீங்கள்? SBI வங்கி எச்சரிக்கை!
இது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் அந்தோணி ராஜு KSRTC க்கு சொந்தமான கட்டிடங்கள் வாடகையின் அடிப்படையில் வர்த்தக ரீதியான பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தி கொள்ளலாம் என கூறியுள்ளார். காலியாக இருக்கும் கடைகள் மற்றும் அறைகளை அரசின் பிற துறைகள் பயன்படுத்த அனுமதி உள்ளது. எனவே மதுபானக் கடைகள் செயல்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் மதுபான கடைகள் மற்றும் பேருந்து நிலையங்களில் மது அருந்துவதற்கு அனுமதி இல்லை என கூறப்பட்டு உள்ளது.