அக்டோபர் மாதத்தில் இருந்து 45 நாட்களுக்கு மதுபான கடைகள் மூடல் – அரசு விளக்கம்!

0
அக்டோபர் மாதத்தில் இருந்து 45 நாட்களுக்கு மதுபான கடைகள் மூடல் - அரசு விளக்கம்!
அக்டோபர் மாதத்தில் இருந்து 45 நாட்களுக்கு மதுபான கடைகள் மூடல் - அரசு விளக்கம்!
அக்டோபர் மாதத்தில் இருந்து 45 நாட்களுக்கு மதுபான கடைகள் மூடல் – அரசு விளக்கம்!

தலைநகர் டெல்லியில் அமல்படுத்தப்பட இருக்கும் புதிய கலால் கொள்கையின் மூலம், வரவிருக்கும் அக்டோபர் மாதத்தில் இருந்து சுமார் 45 நாட்களுக்கு தனியார் மதுபான கடைகள் அனைத்தும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது.

மதுபான கடைகள் மூடல்

டெல்லியில் நவம்பர் மாத இடையில் இருந்து மதுபான கடைகளுக்கான புதிய சில்லறை உரிமங்கள் நடைமுறைக்கு வருவதால், அதற்கு முன்னதாக சுமார் 45 நாட்களுக்கு மதுபான கடைகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது டெல்லியில் அரசு நடத்தும் மதுபான மதுக்கடைகள் தவிர தனியார் கடைகள் அனைத்திற்கும் அக்டோபர் மாத துவக்கத்தில் இருந்து சில்லறை உரிமங்கள் முடிவடைகிறது. இதையடுத்து தனியார் மதுபான கடைகளுக்கான புதிய சில்லறை உரிமங்கள் நவம்பர் மாத இடையில் கொடுக்கப்பட உள்ளது.

SBI வங்கியின் டெபிட் கார்டு வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – அமேசானில் 10% தள்ளுபடி!

இதற்கு இடைப்பட்ட காலங்களில் டெல்லியில் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் மதுபான கடைகள் செயல்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது டெல்லி அரசாங்கத்தின் புதிய கலால் கொள்கையின் கீழ், நவம்பர் மாதத்திற்கான சில்லறை மது விற்பனை உரிமங்கள், 32 மண்டலங்களில் அதிக ஏலதாரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றும் சுமார் 10 வார்டுகள் மற்றும் 27 மது விற்பனையாளர்களை கொண்டுள்ளது.

தற்போது நவம்பர் 16 முதல் புதிய கலால் கொள்கை அமலுக்கு வர இருப்பதால் அனைத்து தனியார் சில்லறை விற்பனையாளர்களும் அதற்கு மாற இருக்கின்றனர். அதனால் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் தனியார் மதுபான கடைகளை மூட வேண்டியிருக்கும். இதற்கிடையில் பண்டிகை காலத்தை முன்னிட்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மட்டுமே மதுபானங்களின் தேவைகள் அதிகரிக்கும் என்பதால் இந்த நெருக்கடி வரவிருக்கும் வாரங்களில் மேலும் மோசமடையும் என கணிக்கப்பட்டுள்ளது. தற்போது, டெல்லியில் 849 மதுக்கடைகள் உள்ளன. அதில் 276 தனியாரால் நடத்தப்படுகிறது.

அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு நாளை ஒருநாள் விடுமுறை – CEO உத்தரவு!

மீதமுள்ளவை டெல்லி அரசு நிறுவனங்களால் இயக்கப்படுகின்றன. இப்போது டெல்லியின் 106 நகராட்சி வார்டுகளுக்கு நவம்பர் 16 வரை எந்த மதுக்கடைகளும் திறக்கப்படாது. மேலும் 26 நகராட்சி வார்டுகளில் தனியார் மதுபான விற்பனை கடைகள் மட்டுமே உள்ளது. அதனால் அக்டோபர் 1 முதல் டெல்லியின் ஆர்.கே.புரம், ஆண்ட்ரூஸ் கஞ்ச், லஜ்பத் நகர், பட்பர்கஞ்ச், ரஜோரி கார்டன், துக்ளகாபாத், கோட்லா முபாரக்பூர், இந்தர்புரி, ராணி பாக், ரோஹ்தாஷ் நகர், ஜில்மில் மற்றும் பாண்டவ் நகர் ஆகிய இடங்களில் மதுக்கடைகள் செயல்படாது என்பது கூடுதல் தகவல்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!