இந்தியாவில் ஆதாருடன் வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு கட்டாயம் – வழிமுறைகள் வெளியீடு!

0
இந்தியாவில் ஆதாருடன் வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு கட்டாயம் - வழிமுறைகள் வெளியீடு!
இந்தியாவில் ஆதாருடன் வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு கட்டாயம் – வழிமுறைகள் வெளியீடு!

இந்தியாவில் ஆதாருடன் வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைன் மூலம் இணைப்பது குறித்து வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த விரிவான தகவல்கள் இந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாக்காளர் அடையாள அட்டை:

இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனும் வைத்திருக்க வேண்டிய முக்கிய ஆவணம் வாக்காளர் அடையாள அட்டை. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் தேர்தலில் வாக்களிப்பது அடிப்படை கடமையாகும். இந்தியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது. மேலும் இந்த தேர்தலில் வாக்களிக்க ஒவ்வொருவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இந்தியாவில் ஆதார் அட்டை பயன்பாட்டிற்கு முன் வாக்காளர் அடையாள அட்டை அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டது.

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் தற்போது ஆதார் அனைத்து அடிப்படை தேவைகளுக்கும் முக்கிய அடையாளமாக விளங்குகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆதாருடன் தொலைபேசி எண்ணை இணைக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. அவ்வாறு இணைக்கப்படாமல் இருந்தால் அரசின் மூலம் பெறப்படும் சலுகைகள் மற்றும் நலத் திட்டங்களை பெற முடியாது என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்காக குறிப்பிட்ட கால அவகாசமும் மக்களுக்கு வழங்கப்பட்டது. இதற்கிடையில் ஆதாருடன் வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைன் மூலம் இணைக்க அரசு சில முக்கிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் – சற்று குறைந்த பாதிப்பு! நிம்மதியில் மக்கள்

1. முதலில் nvsp.in என்ற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.

2. இப்போது போர்ட்டலின் முகப்பு பக்கத்தில் உள்ள வாக்காளர் பட்டியலை கிளிக் செய்ய வேண்டும்.

3. அதன் பிறகு உங்களின் வாக்காளர் அடையாள விவரங்களை பதிவு செய்யவும்.

4. இப்போது Feed Adhaar No வலது பக்கத்தில் காணப்படும், அதை கிளிக் செய்து விவரங்களையும் EPIC எண்ணையும் உள்ளிட வேண்டும்.

5. இதற்கு பிறகு OTP உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.

6. OTP ஐ உள்ளிட்ட பிறகு ஆதார், மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை இணைப்பது குறித்த அறிவிப்பு திரையில் தோன்றும்.

மேலும் ஆதார் மற்றும் வாக்காளர் அடையாளத்தை இணைக்கும் செயல் முறையை எஸ்எம்எஸ் மூலமாகவும் இணைக்க முடியும். இதற்கு, ECILINK< SPACE> என்ற வடிவத்தில் 166 அல்லது 51969 என்ற எண்ணுக்கு SMS அனுப்ப வேண்டும். ECILINK-க்குப் பிறகு உங்கள் EPIC எண் மற்றும் ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும். இதை தவிர 1950 என்ற தொலைபேசி எண்ணை அழைப்பதன் மூலம் ஆதார் வாக்காளர் இணைப்பு சேவையை முடிக்க முடியும். வாக்காளர்கள் தங்கள் ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை ஆஃப்லைன் செயல்பாட்டில் பூத் லெவல் அலுவலரிடம் விண்ணப்பித்து இணைக்கலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!