வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயமில்லை? தேர்தல் ஆணையம் விளக்கம்!

0
வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயமில்லை? தேர்தல் ஆணையம் விளக்கம்!
வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயமில்லை? தேர்தல் ஆணையம் விளக்கம்!
வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயமில்லை? தேர்தல் ஆணையம் விளக்கம்!

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணி ஆகஸ்ட் 1ஆம் தேதி தொடங்கியது. இப்பணிகளை 2023 மார்ச் 31 ஆம் தேதிக்குள் முடிக்கும் வகையில், மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் இல்லை என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதற்கு தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது

ஆதார் எண் இணைப்பு கட்டாயமில்லை:

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பதும் இதனால் கள்ள வாக்குகள் தடுத்து நிறுத்தப்படும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து தேர்தல் ஆணையம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் தற்போது திடீரென வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமில்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதாவது வாக்காளர் அடையாள அட்டையுடன் தனிப்பட்ட அடையாள எண்ணை இணைப்பது விருப்பமானது என்றும், அதை இணைக்காததற்கு வாக்காளர்கள் போதுமான காரணத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க விரும்புபவர்கள் புதிய படிவம் 6B ஐ நிரப்புவதன் மூலம் செய்யலாம். ஒரு வாக்காளர் ஆதார் எண்ணை ஆன்லைனிலும், ஆஃப்லைனிலும் சமர்ப்பிக்கலாம். மேலும் தேர்தல் பதிவேட்டில் பெயர் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு நபரும் அவரது ஆதார் எண்ணுடன் தேர்தல் பதிவு அதிகாரியிடம் படிவம் 6B ஐ சமர்ப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் வியாழக்கிழமை (ஆக.25) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்சாரவாரியம் அறிவிப்பு!

மேலும் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் வாக்காளர் அடையாள அட்டை ரத்து செய்யப்படும் என வாக்குச்சாவடி அலுவலர்கள் பொது மக்களை எச்சரிக்கும் சம்பவம் தொடர்ந்து வருவதால் இந்த நிலை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள எண் இணைப்பது கட்டாயம் இல்லை என்றால் இதை இணைப்பதற்கு யாரும் முன்வர மாட்டார்கள் என்றும் எனவே இந்தத் திட்டமே பாதிக்கப்படும் என்றும் சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!