வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு – மாவட்ட ஆட்சியர் அறிக்கை!

0
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு - மாவட்ட ஆட்சியர் அறிக்கை!
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு - மாவட்ட ஆட்சியர் அறிக்கை!
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு – மாவட்ட ஆட்சியர் அறிக்கை!

தமிழகத்தில் முக்கியமான ஆவணங்களில் ஒன்றான வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் அட்டையுடன் இணைப்பது கட்டாயம் ஆகும். அந்த வகையில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்க என்ன ஆவணங்கள் வேண்டும் என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

வாக்காளர் அட்டை:

மக்களின் அடிப்படை ஆவணங்களில் ஒன்றாக வாக்காளர் அடையாள அட்டை இருக்கிறது. அதன் மூலம் உங்களது தொகுதியில் இருக்க வேண்டிய தலைவர்களை தேர்வு செய்ய உங்களுக்கு வாக்களிக்க உரிமை வழங்கப்படும். அந்த வகையில் வாக்காளர் அட்டையுடன், ஆதார் எண்ணை இணைக்க தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி இருக்கிறது. அதற்கு கால அவகாசமும் வழங்கி இருக்கிறது. இந்நிலையில் விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ. மேகநாதரெட்டி இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

Exams Daily Mobile App Download

அதில் வாக்காளர் பட்டியலினை 100 சதவீதம் தூய்மையாக்குதல், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துதல், ஒரு நபரின் பெயர் ஒரே தொகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இடம் பெறுதல் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் இடம் பெறுதல் ஆகியவை தடுக்கப்பட இருக்கிறது. மேலும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1950 மற்றும் வாக்காளர் பதிவு விதிகள் 1960-ல் செய்யப்பட்டு உள்ள திருத்தங்களின்படி, வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு வாக்காளரிடமிருந்தும் அவர்களது ஆதார் எண்ணைப் பெற்று வாக்காளர் விபரங்களுடன் இணைக்கும் பணியானது 01.08.2022 முதல் தொடங்கப்படவுள்ளது.

CBSEல் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதி தேர்வில் மாற்றம் – முக்கிய தகவல்

மேலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக வீடு வீடாகச் சென்று படிவம் 6B –ல் வாக்காளர்களது ஆதார் எண்ணினை பெற்று இணைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்கள் தங்கள் பகுதிக்குட்பட்ட வாக்காளர் பதிவு அலுவலரது அலுவலகம், உதவி வாக்காளர் பதிவு அலுவலரது அலுவலகம், வாக்காளர் உதவி மையம் மற்றும் பொது இ-சேவை மையங்களிலும் தங்களது ஆதார் எண்ணிணை வாக்காளர் பட்டியலுடன் இணைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆதார் அட்டை இல்லாதவர்கள் கொடுக்க வேண்டிய ஆவணம்:
  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட அடையாள அட்டை
  • வங்கி அல்லது அஞ்சலகம் மூலம் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய கணக்கு புத்தகம்
  • தொழிலாளர் நலத்துறையின் மூலம் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு அட்டை
  • ஓட்டுநர் உரிமம்
  • பான் கார்டு
  • தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்படி இந்திய பதிவாளர் ஜெனரலால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை
  • இந்திய கடவுச்சீட்டு
  • புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணங்கள்
  • மத்திய, மாநில அரசு, பொதுத்துறை நிறுவனங்கள், பொது வரையறுக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை
  • நாடாளுமன்ற, சட்டமன்ற சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ அடையாள அட்டை
  • இந்திய அரசின் சமூக நலம் மற்றும் திறன் மேம்பாட்டு துறையால் வழங்கப்பட்ட தனித்துவ அடையாள அட்டை
  • மேலும் பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து இணைய தளம் வாயிலாகவோ அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக படிவம் 6B–ல் தங்களது ஆதார் விபரத்தை வாக்காளர் பட்டியலுடன் இணைத்து தூய்மையான, வாக்காளர் பட்டியலினை தயார் செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!