தமிழகத்தில் ‘இவர்கள்’ கட்டாயமாக ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் – வெளியான அதிரடி அரசாணை!!

0
தமிழகத்தில் 'இவர்கள்' கட்டாயமாக ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் - வெளியான அதிரடி அரசாணை!!
தமிழகத்தில் 'இவர்கள்' கட்டாயமாக ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் - வெளியான அதிரடி அரசாணை!!
தமிழகத்தில் ‘இவர்கள்’ கட்டாயமாக ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் – வெளியான அதிரடி அரசாணை!!

தமிழகத்தில் பெரும்பாலான அரசின் ஆவண அட்டைகளுடன் ஆதார் எண் இணைக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது அரசின் சேவையை பெறும் இவர்களும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.

ஆதார் எண்:

தமிழகத்தில் ஆதார் எண் மூலமாக அரசின் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி, ஆதார் எண்ணை ரேஷன் கார்டு, பான் கார்டு, வங்கி கணக்கு உள்ளிட்டவற்றுடன் இணைக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அறிவிப்பையும் அரசு வெளியிட்டது. அதன்படி இதற்கான பணிகள் முழு வீச்சில் செயல்பட தொடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது மீண்டும் மத்திய அரசு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

அதாவது அரசிடம் இருந்து மானியம் பெறும் அனைத்து மின் நுகர்வோர்களும் தங்களின் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை செயல்படுத்தும் விதமாக தமிழக அரசு தனது அரசாணையை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முதல் 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாக பெற்று வரும் பொது வழிபாட்டுத்தலங்கள், வீட்டு நுகர்வோர், குடிசை நுகர்வோர், விசைத்தறி, கைத்தறி நுகர்வோர்கள், விவசாய பயன்பாடு மின் இணைப்புகளை பெற்று இருப்பவர்கள் தங்களின் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க வேண்டும்.

2381 அரசு மழலையர் வகுப்புகள் மீண்டும் தொடக்கம் – அரசின் வழிகாட்டுதல்கள் வெளியீடு!

Exams Daily Mobile App Download

இதன் மூலமாக தமிழகத்தில் மின்வாரிய துறையில் முறைகேடுகள் ஏற்படுவது தடுக்கப்படும் என கூறப்படுகிறது. அதாவது ஒரே வளாகத்தில் அதிக இணைப்புகள் வைத்திருப்பது, வாடகைதாரர்களிடம் அதிக மின்கட்டணம் வசூலிக்கப்படுவது உள்ளிட்ட முறைகேடுகள் வெளி கொணரப்படும். இதையடுத்து மானியம் பெறாத தொழிற்சாலைகள், கடைகள், நிறுவனங்கள் உள்ளிட்டவர்கள் தங்களின் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க தேவையில்லை எனவும் தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!