ஊழியர்களுக்கு ஒரு வாரம் தொடர் விடுமுறை – பிரபல நிறுவனம் அறிவிப்பு!!

0
ஊழியர்களுக்கு ஒரு வாரம் தொடர் விடுமுறை - பிரபல நிறுவனம் அறிவிப்பு!!
ஊழியர்களுக்கு ஒரு வாரம் தொடர் விடுமுறை - பிரபல நிறுவனம் அறிவிப்பு!!
ஊழியர்களுக்கு ஒரு வாரம் தொடர் விடுமுறை – பிரபல நிறுவனம் அறிவிப்பு!!

உலகளவில் வேலைவாய்ப்பு தகவல்களை முன்னணியில் கொடுக்கும் லிங்கெடின் (LinkedIn) நிறுவனம் தனது 15,900 ஊழியர்களுக்கு, புத்துணர்ச்சி வழங்கும் நோக்கில் ஒரு வாரம் விடுமுறை வழங்கியுள்ளது.

லிங்கெடின் (LinkedIn) நிறுவனம்:

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் முதல் அலையை விட பல மடங்கு வீரியத்துடன் வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் இந்தியாவில் 1 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனை சரி செய்ய மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். கொரோனா முதல் அலை தாக்கத்தின் போது பல முன்னணி தொழிநுட்ப நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற அறிவுறுத்தினர்.

TN Job “FB  Group” Join Now

அது தற்போது வரை பல நிறுவனங்களில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பல நிறுவன ஊழியர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இது குறித்து ஆய்வு நடத்தியபோது ஊழியர்களுக்கு புத்துணர்ச்சி தேவைப்படுவதாகவும், எங்கும் செல்லாமல் வீட்டில் இருந்தபடியே அதிக நேரம் வேலைப் பார்ப்பதால், மனச்சோர்வை சந்திப்பதாகவும் கூறப்பட்டது.

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறுமா? பள்ளிக் கல்வித்துறை விளக்கம்!

இதனை சரி செய்யும் நோக்கில் உலகளவில் வேலைவாய்ப்பு தகவல்களை முன்னணியில் கொடுக்கும் லிங்கெடின் (LinkedIn) நிறுவனம் தனது நிறுவன ஊழியர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை அறிவித்துள்ளது. அதன்படி ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் லிங்கெடின் நிறுவனத்தின் பணியாற்றும் 15,900 ஊழியர்களுக்கு ஒரு வாரம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை காரணமாக ஊழியர்கள் புத்துணர்ச்சி பெறவும், மன அழுத்தத்தில் இருந்து வெளியே வரவும் பயனுள்ளதாக இருக்கும்.

நாடு முழுவதும் மீண்டும் பொதுமுடக்கம்? மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை!

மேலும் தற்போது கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக 2020 ஆம் ஆண்டு முதல் தொடங்கிய WORK FROM HOME நடைமுறை 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம், 2016 ஆம் ஆண்டு லிங்கெடின் நிறுவனத்தை வாங்கியது. தற்போது உலகளவில் இருக்கும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் சம்பந்தமான தகவல்களை வழங்குவதில் அந்த நிறுவனம் முன்னணியில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!