ஓய்வூதியம் பெறுவோர் கவனத்திற்கு – ஆன்லைனில் டிஜிட்டல் வாழ்வு சான்றிதழ் சமர்ப்பிப்பு!

0
ஓய்வூதியம் பெறுவோர் கவனத்திற்கு - ஆன்லைனில் டிஜிட்டல் வாழ்வு சான்றிதழ் சமர்ப்பிப்பு!
ஓய்வூதியம் பெறுவோர் கவனத்திற்கு - ஆன்லைனில் டிஜிட்டல் வாழ்வு சான்றிதழ் சமர்ப்பிப்பு!
ஓய்வூதியம் பெறுவோர் கவனத்திற்கு – ஆன்லைனில் டிஜிட்டல் வாழ்வு சான்றிதழ் சமர்ப்பிப்பு!

பென்ஷன் திட்டம் மூலம் பணம் பெறும் ஓய்வூதியதாரர்கள் தங்களின் வாழ்வு சான்றிதழை வருடத்திற்கு ஒரு முறை சமர்ப்பிக்க வேண்டும். இதனால் எவ்வாறு ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம் என்பதற்கான எளிய வழிமுறைகள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

வாழ்வு சான்றிதழ்:

ஓய்வூதியம் வாங்கும் ஓய்வூதியதாரர்கள் அனைவரும் தங்களின் வாழ்வு சான்றிதழை ஆண்டிற்கு ஒரு முறை சமர்பிப்பதன் மூலம் அவர்களின் ஓய்வூதியம் தொடர்ந்து வழங்கப்படும். இந்த வாழ்வு சான்றிதழ் ஓய்வூதியம் பெரும் நபர் தொடர்ந்து இருக்கிறார் என்பதற்கான ஆதாரமாக உள்ளது. ஓய்வூதியம் பெற்று வந்த நபர் மறைவிற்கு பிறகும், அவரது பெயரில் தொடர்ந்து ஓய்வூதியம் செலுத்தப்படுவதை தவிர்க்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. முன்னதாக ஓய்வூதியதாரர்கள் நேரில் மட்டுமே சென்று சான்றிதழை சமர்ப்பிக்கும் முறை இருந்து வந்தது.

சென்னை: சவரனுக்கு ரூ.184 குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந்தொற்று காரணமாக ஓய்வூதியதாரர்கள் நேரில் செல்வதை தவிர்த்து சான்றிதழை சமர்ப்பிக்க மேலும் பல வழிகள் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாத இறுதிக்குள் வாழ்வு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த முறை டிசம்பர் மாத இறுதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. எல்ஐசி (LIC) பென்சன் வாங்கும் நபர்கள் ஆன்லைனில் டிஜிட்டல் சான்றிதழை சமர்ப்பிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய வழிமுறைகளை காண்போம்.

LIC ஓய்வூதியதாரர்கள் டிஜிட்டல் சான்றிதழை சமர்ப்பிக்கும் முறை:
  • முதலில் LIC Jeevan Saakshya என்ற செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  • செயலியில், உங்களின் பாலிசி விவரங்கள் மற்றும் ஆதார் எண் உள்ளிட்டவற்றை பதிவிட வேண்டும்.
  • இப்பொழுது, செயலியில் உங்களது செல்ஃபி படத்தை எடுக்க வேண்டும். இது உங்கள் டிஜிட்டல் வாழ்வு சான்றிதழில் பயன்படுத்தப்படும்.
  • இப்பொழுது, உங்கள் ஆதார் சரிபார்க்கப்படும். இதற்காக உங்கள் மொபைலுக்கு OTP எண் வரும். இதனை சரியான இடத்தில் உள்ளிட்ட வேண்டும்.
  • இப்பொழுது, உங்களது டிஜிட்டல் வாழ்வு சான்றிதழ் வரும்.
  • அதனை பதிவிறக்கம் செய்து சமர்ப்பித்து கொள்ளலாம்.

    Velaivaippu Seithigal 2021

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!